Our Temples Our Pride Our Right
Our Temples Our Pride Our Right
February 7, 2025 at 11:34 AM
மிருகங்கள் கொல்லப்படுவதற்கு தடை கேட்டு வழக்கு் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை கிளை சென்னை உயர்நீத்iமன்றத்த்iல் W.P.(MD).No. 15220 of 2023 என்கிற பொது நல வழக்கை நான் தொடுத்தேன். இன்றளவும் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கின் நோக்கம், எல்லா இடங்களிலும் சகட்டு மேனிக்கு மிருகத்தை உணவுக்காக கொலை செய்வதை தடுக்க வேண்டும் என்பது!! காரணங்கள்: * தெரு முனைகளில் விற்கப்படும் இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையில் செய்யப்படுகிறது * அந்த மிருகங்களை கொலை செய்யும் பொழுது வெளிப்படும் இரத்தம் சீழ் சதை எல்லாம் சட்ட விரோதமாக சாக்கடைகளில் செலுத்தப்படுகின்றன * அந்த மிருகங்களை கொலை செய்பவருடைய சுகாதாரம் கேடு கெட்டு இருக்கிறது * கொலை செய்யப்படும் மிருகங்கள் வியாதியுடன் இருக்கின்றனவா என்ற எந்த விதமான தரமும் உறுதி செய்யப்படுவது அறவே இல்லை * ஆடு என்று சொல்லி நாயை குடுத்தாலும் கேட்பாரில்லை * மிருகங்கள் எப்படி இறந்தன என்பதை அறிய வழி இல்லை * அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்லாட்டர் ஹவுஸ்களில் மட்டுமே சட்டப்படி மிருகங்கள் கொலை செய்யப்பட முடியும். மற்ற எல்லாம் சட்ட விரோதம் * அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்லாட்டர் ஹவுஸ்களிலும் கூட சுகாத சீர்கேடு இருக்கின்றது * இந்த சீர்கேடு இன்னும் பல கொரோனாக்களை உருவாக்கும் அபாயம் உள்ளது இப்படி பல காரணங்கள். இந்த வழக்கு, சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்கும் ஒரு அப்பாவியான வழக்கு. இந்த சட்டம் ஒரு மத்த்iய சட்டம் வேறு இந்த சட்டத்தை அமல் படுத்த கூட நீத்iமன்றங்களால் சொல்ல இயலவில்லை. அப்படி செய்திருந்தால், இன்று இந்த த்iருப்பரங்குன்ற சர்ச்சை வந்த்iருக்குமா என்ன? சொல்லப்போனால் Food Poisoning என்று சொல்லப்படுகிற உணவு விஷத்தால் பலர் நம் நாட்டில் அன்றாடம் இறக்கின்றனர். அவர்கள் இறப்பதற்கான காரணம், இதற்கான புள்ளிவிவரம் எதுவும் இந்த நாட்டில் எந்த அரசும் வைத்துக் கொள்வதில்லை. அரசியல் கட்சிகள் ஆன்மீகத்தை தன் சுயநலத்திற்காக உபயோகிப்பதை எதிர்த்து கேள்வி கேட்கும் வரை, ஏதோ இந்து அமைப்புக்கள் மட்டுமே இந்துக்களுக்கு நல்லது செய்ய போவதாக நினைப்பது நிற்கும் வரை, இப்படிப்பட்ட அரசியலுக்காக நடக்கும் ஆர்பாட்டங்கள் (வீண் பேச்சு) தொடரும்.
❤️ 👍 🙏 😂 12

Comments