Our Temples Our Pride Our Right
Our Temples Our Pride Our Right
February 8, 2025 at 05:59 AM
எல்லாம் ஒரு நரேட்டிவ்தான்!!! சமீப காலமாக @pesutamizhapesu ஜோசியத்தை பரப்புவதில் தீவிரம் காட்டுகிறது. இது ஏன் என்று தெரியவில்லை!!! நான் முதலில் இந்த குழுவை சந்தித்தபோது, ​​​​அது அப்படி இல்லை. அவர்கள் தவறான பாதையில் செல்வதாக நான் பார்க்கிறேன், மற்றவர்களையும் அந்த பாதையில் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். இதை தெரிந்து செய்கிறார்களா தெரியாமல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை. அல்லது, இப்படி ஜோசியம் பற்றி சொன்னால் நிறைய Views கிடைக்கின்றது, அதனால் பணம் வருகின்றது என்பதற்காக செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் ஏறக்குறைய நாத்திக மனநிலையில் இருந்த @iamradioguru இப்போது மாறி உண்மையைப் புரிந்துகொண்டு, அவர் ஆன்மீக பாதையில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் சமீபகாலமாக, இந்த ஆன்மீக பயணம், ஒரு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறது என்று நான் கருதுகிறேன். இந்தப் படத்தில் கீழே உள்ளவரை ஏன் @iamradioguru (ராஜவேல் நாகராஜன்) விளம்பரப்படுத்தப்படுகிறார் என்று தெரியவில்லை. இதனால் நாட்டுக்கு நன்மை ஏதும் இல்லை. மூடநம்பிக்கை, சோம்பேரித்தனம், முயற்சியில்லாமல் பலன் பெறக்கூடிய எண்ணம் போன்ற negative விஷயங்கள்தான் இதனால் வளர்கின்றன. நமக்கு புரியும்படி சொன்னால் இந்த நபர் அடிச்சுவுடு சேகர்பாபுவை மிஞ்சிட்டார். இந்த மனிதரை முதலில் @pesutamizhapesu சேனலில் பார்த்தபோதே, அதன் promoவிலேயே மஹா பிரபு நெளிவது எனக்கு புரிந்தது. ஜோசியர்: கல்யாணம் ஆச்சா ஆகலையா? மஹா ப்ரபு: ஆகிடுச்சு ஜோசியர்: குழந்தை உண்டாச்சா இல்லையா? மஹா ப்ரபு: இல்லை ஜோசியர்: அப்ப இது குழந்தை உண்டாகக் கூடிய நேரம். அவ்வளவுதான் மேட்டரு. போங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இது ஜோசியம் என்ற பெயரில் இவர்க்ள் சொல்கின்ற்னர். ஒரு வேளை துர்க ப்ரசாத் இந்த சேனலை விட்டு சமீபத்தில் வெளியேறியதற்கு இப்படிப்பட்ட போக்கு காரணமோ என்னவோ!! அது அவர்கள் தலை எழுத்து. அவர்கள் வழி என் கவலை எல்லாம், இவர்கள் இதை வீடியோவாக போட்டு தன் சேனலில் பரப்புகின்றனர். மூட நம்பிக்கையை வளர்க்கின்றனர். போலிகளை உண்மையை போலே காட்டுகின்றனர். இதே போலத்தான் அந்த @jayasartn என்பவரை இவர்கள் ஏதோ ஆராச்சியாளர் போலவும், அவர் ஏதோ மேதாவி போலவும், ஸம்ப்ரதாயங்களை கற்றவர் போலவும் காட்டிக் கொண்டிருந்தனர். அவருடன் விவாதம் வைத்துக் கொள்ளலாம் என்ற போது, @iamradioguru அதை வேண்டாம் என்று தவிர்த்தார். அதையும் அந்த பெண்மணி திரித்து சொல்லிக் கொண்டிருக்கின்றது. என்ன செய்ய. எல்லாம் ஒரு நரேட்டிவ்தான்!!!
👍 🙏 😂 😢 ❤️ 😮 21

Comments