
Indhu Novels
February 28, 2025 at 07:16 PM
🚨#amazon_free_download
#indhunovels_free_books 📯⏳🔥
#anti_hero 😈 #psycho_love 💘 #action🔫 #comedy 😂 #family 👩👩👦 #romance 💋
(1.3.2025) இன்று மதியம் 1.30⏰ மணி முதல் (2.3.2025) நாளை மதியம் 1.30⏰ மணி வரை கீழ் கண்ட எனது மூன்று மின் புத்தகங்களையும் இலவச தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. 👿 *"ராட்சசனின் சுடரொளியே!"*🔥(சைக்கோ லவ்)
https://amzn.in/d/5VM0tzB
காதலனை நம்பி தன்னை பிறப்பிலிருந்தே வெறுத்து ஒதுக்கும் பெற்றோரை விட்டும் வீட்டை விட்டும் வெளியே வருகிறாள் யமுனா. காதலன் திலீப் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதத்தால் அவனது குடும்பத்திற்கு வேண்டிய பண உதவிக்காக பிரபல ரெசார்ட் ஒன்றில் பணிபுரிய சென்ற இடத்தில், முகம் அறியா கொடூரனிடம் தனது கற்பை இழந்து வாழ்க்கையே நரகமாய் மாறவிருப்பதை அறிவாளா அவள்?
எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் தனக்கு அரணாய் முன்நின்று பாதுகாப்பான் என்று முழுமையாக நம்பி வந்த காதலன், அவளை கடைசிவரை கலங்காமல் காப்பானா? அல்லது குப்பையாக தூக்கி எறிந்து செல்வானா?
யமுனாவின் கற்பை சூறையாடிய ராட்சசன் மீண்டும் வருவானா? அப்படி வந்தால் யமுனாவின் நிலை என்ன? "ராட்சசனின் சுடரொளியே!" கதையை முழுமையாக படித்து அறிந்துகொள்ளுங்கள்.
🍀🍀🍀🍀🍀🍀🍀
2. 🔥*"அக்னிக் கண்ணனின் மிட்டாய் குயில்"* 🐦 (ஆன்ட்டி ஹீரோ & போலீஸ் லவ்)
https://amzn.in/d/hrRfPcX
தமையன் மீது பேரன்பு கொண்ட மாமி, அவனது பணிமாற்றத்தினால் குடும்பத்துடன் ஆந்திரா வருகிறாள். வந்த இடத்தில் ஊரையே நடுங்க வைக்கும் அரக்கனின் விபரீதப் பார்வை மாமியின் மீது படிந்து, அவளுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தி கடத்திச் சென்று அவன் வீட்டில் சிறை வைக்கிறான்.
ஏற்கனவே அவனது சுயரூபம் அறிந்து அவனை கண்டால் அஞ்சி நடுங்கும் மாமி, அவன் செய்யும் தவறுகளை மன்னித்து காதலை உணர்ந்து வாழ்வாளா? அல்லது வார்த்தை எனும் கொடிய விஷத்தால் வாழ்க்கையை தொலைப்பாளா?
இது ரவுடிக்கும் மாமிக்கும் நடக்கப் போகும் லவ் வார்.
கிராமத்தில் இருந்து தனது போலீஸ் மச்சானை தேடி ஆந்திரா வருகிறாள் அப்பாவிப் மங்கை. அவள் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்திலும், குடும்பத்தின் சூழ்நிலையாலும் அவளை ஏற்க முடியாமல் கடுமையாக எட்டி நிறுத்தும் காவலன், தனது காதலை உணர்ந்து மீண்டும் தன்னவளை தேடி செல்லுகையில், அவனுக்கான காதல் அப்படியே அவளிடத்தில் இருக்குமா? அல்லது மரிந்து போய் இருக்குமா?
இது போலீஸ் மச்சானுக்கும் கிராமத்து பெண்ணிற்கும் நடுவே ஆன உணர்வுப்பூர்வமான காதல்களம்.
இரண்டு ஜோடிகளோட அட்டகாசமான காதலை அறிய, படியுங்கள் "அக்னிக் கண்ணனின் மிட்டாய் குயில்" கதையினை.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
3. 💘*"முள் மஞ்சமோ! மலர் தஞ்சமோ!"*
(லவ் & ரொமான்ஸ் 💋)
https://amzn.eu/d/6GiGc4K
அன்பு பாசம் நேசம் அக்கறை என்று சிறுவதில் இருந்தே கிடைக்கப் படாதவள்.. பணத்தின் மேல் மோகம் கொண்ட தனது இரண்டாம் மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்ற மகளை, குடிகாரன், முரடன், பெண்பித்தன் என்று தெரிந்தும் நெஞ்சில் ஈரமின்றி வீராக்கு திருமணம் செய்து வைக்கிறார் சுப்ரமணி.. பிடிக்காத திருமணம் முடிந்து புகுந்த வீட்டிக்கு செல்லும் அப்பாவி மதுவை கண்ணீரில் மூழ்கடிப்பானா? அல்லது அவன் முரட்டுக் காதலில் உருக வைத்து திக்குமுக்காட வைப்பானா வீர்? என்பதை அறிந்துக் கொள்ள முள் மஞ்சம் கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். முழுக்க முழுக்க ரொமான்ஸ் கலந்த கணவன் மனைவியின் காதல் கதை தான்.
🍀🍀🍀🍀🍀🍀
❤️
1