Rj Chandru Report
Rj Chandru Report
January 31, 2025 at 05:06 AM
ஜனாதிபதி அநுர இன்று யாழ். விஜயம்! - யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பங்கேற்பார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளார். அத்துடன், பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதுடன், பிற்பகல் 3:30 மணிக்கு சாவகச்சேரியில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார். கடந்த தேர்தல்களில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு வடக்கு மக்களின் பங்களிப்புக்கு கௌரவமளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது. அத்துடன், ஜனாதிபதியின் இந்த யாழ். விஜயத்தில், வட மாகாண மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையிலான கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
👍 ❤️ 🔥 👏 💞 😂 🤫 🩵 31

Comments