
Makkal Athikaram
January 31, 2025 at 01:25 PM
https://makkalathikaram.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b0/muganul-pakirvu/the-brahminism-of-the-time-that-protects-sanatana/
👉🏿👉🏿சென்னை புத்தகக்காட்சியில் காலச்சுவடு ஸ்டாலில் ‘சனதன தர்மம் ஒரு விசாரணை’ என்னும் ஒரு நூலை வாங்கினேன். சனாதன தர்மத்தை விமர்சிக்கும் நூல் என்று நினைத்துத்தான் வாங்கினேன். ஆனால் அது சனாதன தர்மத்தை நியாயப்படுத்தி எழுதப்பட்ட ஒரு புத்தகம். ஒருபுறம் பழ.அதியமான், பெருமாள் முருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ஸ்டாலின் ராஜாங்கம் என்று அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசரை வைத்து கல்லா கட்டும் காலச்சுவடு தன் ‘ஆத்ம திருப்தி’க்காக அவ்வப்போது இப்படி சில புத்தகங்களைப் போட்டுக்கொள்கிறது.
❌❌😡சனாதனத் தத்துவங்களுக்கு மேற்கோளாகக் காட்டப்படும் பெரும்பாலான நூற்கள் வடமொழி நூற்கள். புராண உதாரணங்களும்கூட வடநாட்டில் பயன்படுத்தப்படுபவையே. தென்னிந்தியாவில் அது வேறுமாதிரியாக இருக்கிறது. உதாரணத்துக்கு விதவை மறுமணம் இந்து மதத்திலேயே இருக்கிறது என்று காட்டுவதற்காக ராவணன் இறந்தபிறகு மண்டோதரி விபீஷணனைத் திருமணம் செய்ததாகச் சொல்கிறார். நாம் அறிந்த கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழ்ப்பிரதிகளில் அப்படியில்லை. எனவே தென்னிந்திய / தமிழ்நிலப்பரப்பைச் சேர்ந்தவர் ஏன் தன்னை ‘இந்து’ என்று உணர வேண்டும்?