Barakath Ali - journalist
Barakath Ali - journalist
February 16, 2025 at 05:04 AM
*2015-ல் அதிமுக செய்த அட்டூழியத்தை 2025-ல் பாஜக செய்கிறது!* 2011 - 2016 ஜெயலலிதா அமைச்சரவையைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் 30 வாரங்களாக ‘மந்திரி தந்திரி’ என்ற கட்டுரைத் தொடரை எழுதும் பொறுப்பை ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் சார் என்னிடம் வழங்கினார். அமைச்சரின் பெர்சனல் பக்கம், துறை சார்ந்த பணிகள் உள்ளடக்கி அந்தக் கட்டுரைகள் வாரம் தோறும் வெளியாகின. மாவட்ட செய்தியாளர்களின் பங்களிப்புடன் எழுதிய மந்திரி தந்திரி தொடர் பரபரப்பாக வாசிக்கப்பட்டன. தன்னுடைய மாவட்டத்தில் ஆனந்த விகடன் வெளியாகும் போது மொத்தமாகக் கடைகளிலிருந்து அமைச்சர்களின் ஆட்கள் வாங்கி சென்று யாருக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அந்தத் தொடரின் இறுதியில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை ‘என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில் 1995 நவம்பர் 25 தேதியிட்ட இதழில் எழுதினேன். அதற்காக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர், பதிப்பாளர் மற்றும் அச்சிடுபவர் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதோடு நிற்கவில்லை. ஆனந்த விகடனின் முகவர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்ட போலீஸ் ஆனந்த விகடனை விற்கக் கூடாது என்று அச்சுறுத்தினர். மீறி விற்பனை செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று மிரட்டினார்கள். இதன் தொடர்ச்சியாக விகடனின் ஃபேஸ்புக் பக்கம் 2016 நவம்பர் 23-ம் தேதி மாலை முதல் திடீரென முடக்கப்பட்டது. இது தொடர்பாக எந்த ஒரு முறையான அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பிலிருந்து மேற்கொண்ட விசாரணைக்கும், முறையான பதிலும் இல்லை. 2015-ல் அதிமுக செய்த அட்டூழியத்தை பத்தாண்டுகள் கழித்து இன்றைக்கு பாஜக செய்கிறது!

Comments