
Barakath Ali - journalist
262 subscribers
Similar Channels
Swipe to see more
Posts

*பழைய பேப்பர்!* ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. 1991-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் போர் தொடுத்த போது ஈராக் அதிபர் சதாம் உசேன், திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தினார். இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. 35 ஆண்டுகள் கழித்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை ஈராக் அல்ல. ஈரான்.

*பழைய பேப்பர்!* 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகை சௌந்தர்யா பிரசாரம் செய்தார். 2004 ஏப்ரல் 16-ம் தேதி தனது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூரில் தேர்தல் பிரசாரத்திற்காக தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்து சௌந்தர்யா புறப்பட்ட தனி விமானம் விழுந்து நொறுங்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

*பழைய பேப்பர்!* 1996 நவம்பர் 12-ம் தேதி சவுதி அரேபியாவின் சவுதியா விமானமும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானமும் அரியானாவின் சார்கி தாத்ரி அருகே நடுவானில் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், 349 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

’’அண்ணாமலை நம்பியாவது வருவாங்க. எடப்பாடி பழனிசாமியை நம்பி எவன் கூட்டணிக்கு வருவான்’’ என பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா. தேர்தெடுக்கப்பட்டவருக்கு இருக்கும் மரியாதை ஊர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இல்லை!

*அண்ணாமலை சொன்ன பொய்கள் 22* *NDPS சட்டம்!* https://youtube.com/shorts/7Md9ITknhyw?feature=share

*சினிமா மட்டும்தான் உலகமா? அதை தாண்டி உலகம் இருக்குனு விஜய்க்கு தெரியாதா?* 'நீட் தேர்வு மட்டும்தான் உலகமா?’ என கேட்கிறார் நடிகர் விஜய். சினிமாவை தாண்டியும் உலகம் இருக்கிறதுதானே! ஏன் நடிகன் ஆக வேண்டும் என விஜய் ஆசைப்பட்டார். ’நீட் மட்டும்தான் உலகமா?’ என கேட்கும் ஜனநாயகனின் சர்வாதிகாரத்தை தோலுரிக்கிறது வீடியோ! https://youtu.be/Zvr4aSIaJfc