
Shree Investments
February 14, 2025 at 02:20 AM
*கவனித்தீர்களா* ?
மற்ற உலக நாடுகள் மீது வரிவிதிப்பு முயற்சி மேற்கொள்ளும் அமெரிக்கா , இன்னும் இந்தியா மீதான கூடுதல் வரிவிதிப்பு பற்றி எந்த அறிக்கையும் விடவில்லை.
*கவனித்தீர்களா* ?
அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்திய வம்சாவளியினரின் மேலாதிக்க பங்கேற்பு அதிகரித்துள்ளது என்பதை!
1. துள்சி கப்பார்ட்.
2. உஷா வேன்ஸ்
3. காஷ் படேல்
4. விவேக் ராமசாமி மற்றும் முன்னனித் துறைகளில் சுந்தர் பிச்சை , நாதெள்ளா போன்ற தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள்.
*கவனித்தீர்களா* ?
சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்றும் இந்த அரசு , சட்ட பூர்வமாக குடியேறி அமெரிக்காவின் பொருளாதார, மருத்துவ, டெக்னாலஜியில் முக்கிய பங்களிக்கும் இந்திய மக்களுக்கு ட்ரம்ப் அரசு அணைத்து நிற்கும் என அளிக்கப் பட்ட தேர்தவ் வாக்குறுதிகள்.
*கவனித்தீர்களா* ?
அமெரிக்க டாலர் வர்த்தகத்திற்கு மிகச் சவாலான *பிரிக்ஸ் நாணயச் செலாவணியை* பிரிக்ஸ் உருவாக்க நாடான இந்தியா மறுத்துள்ளதை...
*கவனித்தீர்களா* ?
அமெரிக்க பொருட்களின் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக இந்தியா அறிவித்துள்ளதை ......
இந்தியாவின் ஏற்றுமதியில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவுடனான வணிகத்தை இது அதிகரிக்கும் என்பதை ......
*கவனித்தீர்களா* ?
இந்த பட்ஜெட்டில் இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை .....
*கவனித்தீர்களா* ?
ஐரோப்பாவின்பாதுகாப்பை ஐரோப்பா தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்ற ட்ரம்பின் அறிவிப்பு , இந்திய ராணுவ தளவாடங்கள் மற்றும் ஐரோப்பாவே தயாரிக்கும் தளவாட உதிரி பாகங்கள் ஏற்றுமதியை அதிகரிக்கக் கூடும் என்பதை......
*கவனித்தீர்களா* ?
அமெரிக்காவின் மருந்து உற்பத்தித் துறையின் முக்கிய பெரும் ஏற்றுமதியாளர்கள்
1. சீனா ( ட்ரம்ப்பின் முக்கிய எதிரி நாடு
2. ஐரோப்பா - உக்ரேன் விவகாரத்திலும்,நேட்டோ நிதி பங்களிப்பிலும் அமெரிக்க நிதியை சுரண்டியதாக ட்ரம்ப் நினைப்பது ,மற்றும் டாலர் வணிகத்தின் பெரும் சவால் ஈரோ நாணய வர்த்தகத்தை தூண்டுவது
3. இந்தியா - நட்பு நாடு , மோடியின் தனிப்பட்ட நட்பு , சீனாவை முறியடிக்க ட்ரம்புக்கு உள்ள ஒரே வாய்ப்புள்ள நாடு
ஆகவே முன்பே அதிகரித்துள்ள இந்திய மருத்துவ தயாரிப்புகளின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதையும் , டாலர் மதிப்பு கூடுவது ,ஏற்றுமதி லாபத்தை இன்னும் அதிகரிக்கும் என்பதையும் .....
*கவனித்தீர்களா* ?
ட்ரம்ப் அதிபரானவுடன் ,அதிகார பூர்வமாக , முதன் முதலாக சந்திக்கும் வெளிநாட்டு தலைவர் மோடி என்பதை........
*கவனித்தீர்களா* ?
அதி நவீன இராணுவத் தளவாட இறக்குமதிக்கு இந்தியா இசைந்துள்ளதையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா எதிரி நாடாக கருதும் சீனாவின் வல்லாதிக்கத்தை தடுக்கவும் , அதற்கு இந்திய ராணுவ தொழில் நுட்பத்தை அதிகரிப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவின் நன்மைக்காகவும் என்பதையும் , இந்தியாவின் பட்ஜெட் செலவினத்தில் இராணுவச் செலவினம் முதலிடத்தில் இருப்பதும் .....
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதையும் .......
*கவனித்தீர்களா* ?
இத்தனை வாய்ப்புள்ள இந்தியாவின் பங்குச் சந்தை மாற்றங்களை லாப நோக்குடன் செயல்படும் வணிக செய்தி ஊடகங்கள் செய்தித் தலைப்புகள் தனி நபர் முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதும் , அதனால் அவர்கள் செய்துள்ள முதலீட்டை குறைந்த விலையில் விற்று விட்டு முதலீட்டில் நஷ்டம் அடைவதையும் .....
*இது அத்தனையும் கவனித்து இருந்தீர்கள்* *எனில் உங்கள் ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பற்றி கவலைப் படவேண்டாம்*
ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட் ஒவ்வொரு தனி நபரின் ரிஸ்க் எடுக்கும் நிலையை முதலில் அனுமானித்து பிறகு நீண்ட கால முதலீட்டு ஆலோசனைகளை மட்டுமே வழங்குவதால் நம்பிக்கையுடன் உங்கள் இலக்குக் காலம் முடியும் வரை காத்திருந்து எதிர்பார்த்த லாபத்தை உறுதி செய்துகொள்ள ஆலோசனை வழங்குகிறோம்.
ஸ்ரீதர் ராஜசேகரின் 40 ஆண்டுக்கால நிதித் துறை அனுபவத்தோடு, முதலீட்டு வாடிக்கையாளர்கள் நலன் கருதி இயங்குவதால் ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட் நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் பாதுகாப்பான திட்டங்களை ஆலோசனை வழங்கும் ஓரு நிறுவனம் ஆகும்.
-ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட்
©பல்வேறு கட்டுரைகளின் அடிப்படையில் கருத்துருவாக்கப்பட்ட படைப்பு .