Shree Investments
Shree Investments
February 20, 2025 at 03:40 PM
*தக்காளியும் மியூச்சுவல் ஃபண்டும்?* கடந்து வருடம் நடந்த நிகழ்வு இது‌. என் நண்பர் ஒரு பெரிய பையில் தக்காளி 🍅 வாங்கிக் கொண்டிருந்தார். என்ன சார் ? உங்க வீட்டில் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து நான்கு பேர் மட்டும்தானே? பிறகு எதற்கு இத்தனை பெரிய பையில் தக்காளி வாங்குகிறீர்கள் ? பழம் அழுகிப் போய்விடாதா? என்றேன். அதற்கு அவர் , இல்லை சார் , இப்போது தக்காளி விலை ரூ 5 க்கு வந்துள்ளது . இப்போது ரூ 100க்கு 20 கிலோ வாங்கினால் , வீட்டில் கொஞ்சம் ஜாம் கொஞ்சம் ஊறுகாய் தயாரிப்பார்கள். அதை ரொம்ப நாள் ஏறக்குறைய வருடம் முழுதும் நாங்கள் பயன் படுத்துவோம். விலை குறைவாய் கிடைக்கும் போது அதிகம் வாங்கி வைப்பதுதான் சார் லாபம் என்றார். இதே மனிதர்தான் போன வருட நடுவில் மியூச்சுவல் ஃபண்ட் NAV குறைந்து கொண்டே போகிறது என்று இரண்டு வருடமாய் சேர்த்திருந்த ஃபண்ட் முழுதும் REDEEM செய்து விட்டவர். அவரிடம் ஒரு வருட பலன் தருகின்ற தக்காளி விலை குறையும் போது வாங்குகிறீர்களே ! வாழ்வில் உங்கள் நீண்ட கால பொருளாதார வளமைக்கு உதவும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளையும் விலை குறைந்த போது வாங்கினால் அது எவ்வளவு பலன் தரும் என்பதை உணர்ந்தீர்களா ? குழந்தையாய் உங்கள் மகன் இருக்கும்போது செய்யும் பத்தாண்டு மாதாந்திர முதலீடு எவ்வளவு செல்வ வளத்தை உருவாக்கக் கூடும் என்பதை அறிவீர்களா ? என்ற‌ என் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் புரியாதது போலவே என்னைப் பார்த்தார். சரி, நீங்கள்தான் அந்த வியாபாரி என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விற்பது வெங்காயம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஒரு உதாரணத்திற்கு நேற்று ₹ 50 க்கு வாங்கிய வெங்காயம் இன்று ₹ 40 க்கு மார்க்கெட் விலை குறைந்து விட்டால் ஓரிரு நாட்கள் வைத்திருந்து விலை சாதகமாய் இருக்கும்போது விற்பீர்களா? அல்லது நஷ்டத்திற்கு விற்பீர்களா ? ஒரு நல்ல வியாபாரி மேலும் வெங்காயத்தை ₹40 விலைக்கு வாங்கி மறுபடி ₹ 50 க்கே விற்றாலும் லாபம் பெறும் வகையில் வாங்கும் விலையை AVERAGE செய்து விற்பார் அல்லவா ? இதே கருத்துத் தான் உங்களுக்கும். உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் விலை குறையும்போது அச்சம் கொள்ளாமல் , அப்படியே வைத்திருக்கவும்; முடிந்தால் மேலும் சில யூனிட் களை வாங்கி குறிக்கோள் காலம் வரை வைத்திருப்பதே செல்வம் சேர்க்கும் வழி காத்திருப்பது ஒரு வருடமாக இருக்கலாம் . இரண்டு அல்லது மூன்று வருடமாகக் கூட இருக்கலாம். அந்தக் காத்திருப்பு காலத்தின் முடிவில் நீங்கள் எதிர்பார்க்காத லாபத்தை அளிப்பது தான் மியூச்சுவல் ஃபண்ட் வரலாறு.
👍 1

Comments