கல்விச்சுடர் / KALVICHUDAR
January 31, 2025 at 02:18 AM
இன்றைய செய்திகள்
31.01.2025(வெள்ளிக்கிழமை)
🌹ஒருவரிடம் பல மணி நேரம் பேசுவது நட்பல்ல...
அவரைப் பற்றி மற்றவரிடம் தவறாகப் பேசாமல் இருப்பதே நட்பு.!
🌹🌹எந்த உறவும் தேவை இல்லை என்று விலகிப் போக காரணம் கோபமோ..!
வெறுப்போ..! அல்ல.
இன்னொரு முறை..
துரோகத்தையும் அவமானத்தையும் பார்த்து தன் தன்மானத்தை இழந்து விடக்கூடாது
என்பதற்காக.!!
🌹🌹🌹பிரிவுக்கு மிக
முக்கியமாக அமைவது எதுவென்று யோசித்தால்...
ஆரம்பத்தில் ஆர்வமிகுதியில் உளறிய சில உண்மைகளால் தான் இருக்கும்.!!!
அனைவரும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘குரூப் 2, 2A முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு:
முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. 📕📘தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவி மூச்சுத்திணறி உயிரிழப்பு. அதிகளவு அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த சோகம். 📕📘பொதுத் தேர்வை மிஞ்சும் வகையில் SLAS தேர்வு நடைமுறைகள் மாணவர்கள் இடையே தேர்வு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் கருத்து.
📕📘SLAS EXAM 2025:- 👉5 & 8-ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS EXAM க்கான
OMR Fill செய்தல் & விடையளித்தல்.
👉OMR Fill செய்யும்போது கவனிக்க வேண்டியவை
👉மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுதவும்.
👉Black /Blue colour பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்தவும்.
👉ink pen / gel pen பயன்படுத்தக் கூடாது.
👉OMR - ஐ மடக்கவோ,கசக்கவோ,கிறுக்கவோ கூடாது.
👉தவறான விடைகளை Whitener / பிளேடு மூலம் திருத்தம் செய்ய முயற்சி செய்யக்கூடாது.
👉ஒரே வினாவிற்கு இரண்டு விடைகளை தேர்வு செய்யக் கூடாது. 👉தேர்வு முடிந்த உடன் OMR-ஐ கையில் எடுத்து செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
📕📘செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு.
👉10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் அறிவிப்பு.
👉பிப்.22 முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.
📕📘கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15% வரை சம்பள உயர்வு...
-தமிழ்நாடு அரசு உத்தரவு.
10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள நிலை மாற்றியமைப்பு.
வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவு.
📕📘திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா பெருந்திரளணி வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 3,400 மீட்டர் சுற்றளவில் 3.17 லட்சம் அலங்காரப் பூச்செடிகள் மூலம் பாரத சாரண, சாரணியர் இயக்க இலட்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.
📕📘மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்து.. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு
முதுநிலை மருத்துவக்கல்வி சேர்க்கையில் மாநில இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்
50% முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து மூலம் 1207 இடங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான மாநில இடஒதுக்கீட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என அமைச்சர் உறுதி 📕📘பெண்களின் பாதுகாப்புக்காக காலணிகளை வடிவமைத்த பள்ளி மாணவர்கள்!
உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக SOS எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணிகளை வடிவமைத்து தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தல்!
அம்ரித் திவாரி, கொமால் ஜெய்ஸ்வால் ஆகியோர் இதை கண்டறிந்துள்ளனர்.
இதை செல்போன் செயலியுடன் இணைத்து, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நேரத்தில் செருப்பில் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனே எச்சரிக்கை சென்றுவிடும்.
📕📘மருத்துவ படிப்பில் வசிப்பிட ஒதுக்கீடு செல்லாதா?: ராமதாஸ் கேள்வி*
மருத்துவ படிப்பில் வசிப்பிட ஒதுக்கீடு செல்லாதா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டத் திருத்தம் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநில அடிப்படையில் ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு போன்ற வலுவான மருத்துவக் கல்வி கட்டமைப்பு கொண்ட மாநிலங்கள் பாதிக்கும் மருத்துவ இடங்களை பிற மாநில மாணவர்களுக்கு தாரை வார்க்க தீர்ப்பு வழி செய்யும்; இது மாநில உரிமைக்கு எதிரானது என தெரிவித்தார்
📕📘ஆதிதிராவிடர் மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்டில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான “பணவுறுதி ஆவணம்” (Skill Vouchers) வழங்க “உயர் திறன் ஊக்கத்திட்டம்“ - ஆணை வெளியீடு.
📕📘TET தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகளாக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள்.
📕📘TNTRB ஆட்சேர்ப்பு 2025, 132 உதவி பேராசிரியர் பணியிடங்கள் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2025
📕📘UGC 2025 வரைவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்ய பொது மக்களுக்கு அழைப்பு.
📕📘தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களின் மீது பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு.
📕📘நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தவிர்த்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை திறம்பட கையாளுதல் சார்ந்து பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுச் செயலாளரின் கடிதம்
வெளியீடு.
📕📘பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை டிட்டோஜாக் நேற்று சார்பில் சந்தித்தனர்.
📕📘01.07.2023 முதல் 30.06.2024 வரை மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட பணியாளர்கள் / ஓய்வூதியர்கள், தங்களது செலவினத் தொகையை மீளப்பெற 14.02.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு. 📕📘மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்
-உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
📕📘குடியரசுத் தினத்தில் பங்கேற்ற முப்படைகள் பாசறை திரும்புதல் நிகழ்ச்சி கோலாகலம். டெல்லி விஜய் சதுக்கம் பகுதியில் இசைக்கருவிகள் முழங்க தரைப்படை, கடற்படை, வான்படை வீரர்கள் பாசறை திரும்பினர்.
📕📘தவெக தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான் என்றும், ஆதவ் அர்ஜுனாவுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
📕📘நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று, வேங்கைவயல் சம்பவத்தில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து.
📕📘விரைவில் தாயகம் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டு கொண்டதின் பேரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடவடிக்கை.
📕📘சவுதி அரேபியாவின் ஜிசன் அருகே சாலை விபத்து நிகழ்விடத்திலேயே 9 இந்தியர்கள் உயிரிழந்த சோகம்.
📕📘தமிழ்நாடு அரசு உத்தரவு!
👉குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது.
👉அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
👉இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது.
👉தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு.
👉மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம்.
👉ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
📕📘இந்தியாவில் புலம்பெயர்ந்தோரை ஒழுங்குபடுத்த புதிய மசோதா!
வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 'குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா' என்ற புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்.
📕📘வக்பு சட்டதிருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார் கூட்டுக் குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால்
கூட்டுக்குழுவின் அறிக்கை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
📕📘"Podcast, Social Media Influencers மற்றும் Content Creators வாயிலாக செய்திகளை அறிந்து கொள்ள மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பில் இனி கன்டென்ட் கிரியேட்டர்களும் இடம்".
வெள்ளை மாளிகையின் இளம் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் அறிவிப்பு. 📕📘நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை : உயர்நீதிமன்றம் அதிருப்தி
நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தை நாட இயலாத ஏழைகள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பல வழக்குகளில் போலீஸ் குறித்த காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்றும் காவல்துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது என்றும் ஐகோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது.
📕📘“OLA, UBER மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?''.
"தமிழகத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் OLA, UBER மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்...
ஓட்டுநர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை போக்குவரத்துத்துறை உயர்த்த வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்தவில்லையென்றால், பிப்.1ம் தேதி முதல் ஓட்டுநர் சங்கம் அறிவித்த கட்டணம் வசூல் செய்யப்படும்".
-ஓட்டுநர்கள் சங்கம்
📕📘ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறுதான் தெரியும்".-அமைச்சர் சாமிநாதன்.
எழும்பூர் அருங்காட்சிகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
ஆளுநர் குறிப்பிடுவது போல அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடக்கவில்லை என்பது அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும்.
ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறு தான் தெரியும்.
-அமைச்சர் சாமிநாதன் அறிக்கை.
📕📘மயிலாடுதுறை அருகே இறந்த மனைவியின் மடி மீது தலை வைத்து தீக்குளித்த கணவன்.
மனைவி மீது கொண்ட தீரா காதலால் சித்த மருத்துவர் இளங்கோவன் தீக்குளிப்பு.
தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சித்த மருத்துவர் இளங்கோவன் மீட்பு.
-திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சித்த மருத்துவர்.
90% தீக்காயம் ஏற்பட்டிருப்பதால், அபாய கட்டத்தில் உள்ள சித்த மருத்துவர்.
-சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்.
📕📘மாடுகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு.
நேற்று நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
📕📘தமிழகம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் 83 பேர் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு
📕📘சிறைக் காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ’ஆடர்லி’ முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
விரைவாக நடவடிக்கை எடுத்த அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு. சிறைத்துறையைப் போல, காவல்துறையிலும் ஆடர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து
📕📘யு.ஜி.சி விதிகள் தொடர்பாக டெல்லியில் பிப். 6-ம் தேதி தி.மு.க போராட்டம் - டி.ஆர். பாலு அறிவிப்பு
டெல்லியில் தி.மு.க மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “யு.ஜி.சி புதிய விதிகள் தொடர்பாக பிப்ரவரி 6-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும்; மாணவர்கள் போராட்டத்தி பங்கேற்பார்கள். யு.ஜி.சி விதிகளில் மாற்றம் செய்யப்படுவதை தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கும்” என்று கூறியுள்ளார்.
📕📘ஆளுநர் ரவி அரசியல்வாதி போல செயல்படுவதால் பாராட்ட மனம் இல்லாமல் அரசை குறை சொல்கிறார்"
காந்தி நினைவு நாள் அனுசரிப்பு குறித்து ஆளுநர் ரவியின் விமர்சனத்திற்கு
அமைச்சர் எ.வ.வேலு பதிலடி
📕📘"உலகின் சிறந்த AI மாடலை இந்தியா உருவாக்கும்''
உலகின் மிகச்சிறந்த AI மாடலை, இன்னும்
8 முதல் 10 மாதங்களில் இந்தியா உருவாக்கும்
ரூ.10,370 கோடி மதிப்பிலான IndiaAI திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டின் சிறந்த மொழி ஏஐ மாடலை உருவாக்க மத்திய அரசு முடிவு
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
📕📘நீலகிரியின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடத்துநராக பணியாற்றிய சுகன்யாவின் கணவர் கருப்பசாமி 2023ம் ஆண்டு பணியின்போது உயிரிழந்தார்.
கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க சுகன்யா கோரிக்கை வைத்திருந்த நிலையில்,அடுத்த ஓராண்டுக்குள் நடத்துநர் பணி வழங்கி உத்தரவிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன்படி, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் வழி மார்க்கமாக இயக்கப்படும் அரசுப் பேருந்தின் நடத்துநராக நேற்று முதல் பணியைத் தொடங்கியுள்ளார்.
📕📘ஏறுமுகத்தில் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு. ஒரு கிராம் ரூ7,610க்கும், ஒரு சவரன் ரூ.60,880க்கும் விற்பனையாகிறது.
📕📘📕📘📕📘📕📘📕📘
🌹🌹நுரையீரலை காக்கும் வெற்றிலை கஷாயம் செய்யும் முறை
👉இன்று நாகரிக மாற்றத்தால் வெற்றிலை போடும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது .நம் ஊர்ல பெரியவர்கள் வெற்றிலை போடுவதை பார்த்திருப்பீர்கள் .அதில் பல ஆரோக்க்கிய நன்மைகள் அடங்கியுள்ளது ,மேலும் வெற்றிலை கால்சியம் சத்துக்கள் நிறைந்து ஒரு பொருள் .இது நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை வழங்க கூடியது .இது நம் நுரையீரலுக்கு ஏற்படும் சுவாச கோளாறுகளை முதல் சளி பிரச்சினை வரை தீர்க்கும் குணம் உண்டு .நமது நுரையீரலை காக்கும் வெற்றிலை கஷாயம் தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.
🌹👉வெற்றிலை கசாயம் செய்முறை:
👉தேவையான பொருட்கள்
👉வெற்றிலை - 1
👉மிளகு - 8
👉சீரகம் - ⅛ தேக்கரண்டி
👉கிராம்பு - 1
👉சுக்குப் பொடி - ¼ தேக்கரண்டி
👉தண்ணீர் - ½ கப்
👉முதலில் வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு அதை தண்ணீரில் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். அதில் மிளகு, கிராம்பு சுக்கு தூள் சேர்க்கவும்.
👉தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். பாதியாக சுண்டிய கசாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி கசாயமாக குடிக்கவும்.
சுலபமாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கசாயம் இது. கூடுதலாக வாய் துர்நாற்றம் மற்றும் செரிமாணக் கோளாறுகளையும் போக்கும் அற்புதமான கசாயம் இது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்
&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926