
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
February 3, 2025 at 05:17 AM
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் *புரட்சித் தமிழர் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 03.02.2025, திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் MA EX MLA அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் கழக அமைப்புச் செயலாளர் வரகூர் அ அருணாச்சலம் முன்னிலை வகித்தார்.அதுசமயம் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.