Consciousness 🧘♂️இது ஒரு பாதை ☯️அறிவியல் வழி ஆன்மிகம்
                                
                            
                            
                    
                                
                                
                                February 23, 2025 at 03:43 AM
                               
                            
                        
                            *சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே* 
சிறுவர்கள் அறியாமல் செய்த தவறுகளை எல்லாம் பெரியவர்கள் பொறுத்துக் கொள்வது *கடமை* ஆகும்.
                     ***
*சிறியோர் பெரும் பிழை செய்தனராயின் பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிது*
சிறுவர்கள் பெரிய தவறுகளைச் செய்தார்களானால் பெரியவர்கள் அதைப் பொறுத்துக் கொள்வது *அரிது*.
            
                   ***
  *ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர் வீழ்கும்மே*
பெரியோர்களுடன் ஒருநாள் பழகிய போதிலும் அந்தப் பழக்கமானது *பூமிக்குள் வேர் விடுவது போன்றது* ஆகும்.
*நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே* 
முரடர்களோடு நூறு ஆண்டுகள் பழகினாலும், அந்தப் பழக்கமானது *நீரிலுள்ள பாசிபோல் காணப்படுமே* ஒழிய, வேர் கொள்ளாது.
23-feb-25
✨ 73
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        6