Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
March 1, 2025 at 12:28 PM
*`இராஜபாளையம் வாழ் ஆன்மீக அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி!`* இராஜபாளையம் வழியாக இந்துக்களின் புனிதத் தலங்களான *"பஞ்ச ஜோதிர்லிங்கம்" & "ஷீரடி"* ஆன்மீக சுற்றுலா இரயில் இயக்கம்! •மேற்கிந்திய ஆன்மீக திருத்தலங்களுக்கு இராஜபாளையத்தில் இருந்து நேரடியாக சென்று வர ஓர் அரிய வாய்ப்பு!• IRCTC-யின் பாரத் கௌரவ் சுற்றுலாவின் "புண்ணிய தீர்த்த யாத்திரை" திட்டத்தின் கீழ் இராஜபாளையம் வழியாக இயக்கப்படவுள்ளது. *சுற்றுலா வண்டி எண்:SZBG29* *இவ்வண்டியில் சுற்றிக்காட்டப்படவுள்ள ஆன்மீக ஸ்தலங்கள்:* `இராஜபாளையம் கிளம்பும் நாள்: 25.04.2025` _** 26.04.2025: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவில்(ஜோதிர்லிங்கம்)_ _**27.04.2025: அவுண்டா நாகநாதர் கோவில்(ஜோதிர்லிங்கம்), நான்டெட்._ _**28.04.2025: பரளி வைத்தியநாத் கோவில்(ஜோதிர்லிங்கம்)_ _**29.04.2025: அவுரங்காபாத் குஷ்மேஸ்வர் கோவில்(ஜோதிர்லிங்கம்)_ _**30.04.2025: ஷீரடி சாய்பாபா கோவில்,ஷீரடி_ _**01.05.2025: பீமாஷங்கர்,புனே(ஜோதிர்லிங்கம்)_ `இராஜபாளையம் திரும்புதல்/வருகை நாள்: 03.05.2025` இராஜபாளையத்திலிருந்து மொத்தம் 9 நாள்கள் இந்த ஆன்மீக சுற்றுலா இரயில் வண்டியில் பயணம் செய்யலாம். *நிறுத்தங்கள்:* திருநெல்வேலி, தென்காசி, `இராஜபாளையம்`, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ரேணிகுண்டா, கடப்பா, குத்தி, கர்நூல், நான்டெட், பரளி, அவுரங்காபாத், ஷீரடி, புனே. *இயக்கப்படும் வகுப்புகள்/கட்டணங்கள்:* 03 மூன்றடுக்கு பெட்டிகள், 08 ஸ்லீப்பர் பெட்டிகள், 01 சமையற்கூட பெட்டி, 02 மின்சார உற்பத்தி பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகளோடு இயக்கப்படும். *கட்டணம்:* (பயணக்கட்டணம், பயணக்காப்பீடு,தங்குமிடம்,உள்ளூர் வாகனம்,உணவு,சுற்றுலா வழிகாட்டி,காவலர்,குடிநீர் உட்பட..) மூன்றடுக்கு ஏ/சி(3Tier A/C): ₹.30,700/- ஸ்லீப்பர்(Sleeper class): ₹.16,660/- 3 A/C யில் பயணிப்பவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உள்ளூர் வாகனம் A/C வசதியுடன் கிடைக்கும். Sleeper class-ல் பயணிப்பவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உள்ளூர் வாகனம்NON A/C வசதியுடன் கிடைக்கும். _மேற்சொன்ன கட்டணங்கள் அல்லாத இதர செலவுகள் பயணிகளின் சொந்த செலவுகளில் செய்து கொள்ள வேண்டும்._ `உணவு:` தென்னிந்திய சைவ உணவுகள் வழங்கப்படும். *குறிப்பு:* •இவ்வண்டி IRCTC-யால் இயக்கப்படும் சுற்றுலா வண்டியாகும்(நிரந்தர/சிறப்பு வண்டி அல்ல). முழுவதும் முன்பதிவு பெட்டிகளோடு இயக்கப்படும். •இரயில் நிலைய பயணசீட்டுகள் இதில் செல்லுபடியாகாது. •பயண ரத்து கட்டணம் உண்டு/நாள்களுக்கேற்ப மாறுபடும். •IRCTC-யின் பயண விதிகளுக்கு கட்டுப்பட்டு பயணிக்க வேண்டும். `இவ்வண்டியில் பயணம் செய்ய முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களுக்கு:` Tourism Information and Facilitation Centre Trichy: 8287932070 Madurai: 8287931977, 8287932122 Chennai: 9003140680/682, 8287931964 Website: www.irctctourism.com *ஆன்மீக அன்பர்களின் தகவலுக்கு:* `-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்.`

Comments