
நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
February 17, 2025 at 05:46 AM
மகிழ்ந்திருங்கள் . . .🧡🧡
_________________💛_________________
இன்ஸ்டாகிராம், யூடியூப் கமெண்ட்ஸ் மற்றும் நேரிலும் என பகவான் சனீஸ்வரனை பற்றிய கேள்விகளையே தான் நான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பல இடங்களிலும் பலரிடமும் எதிர் கொள்கிறேன்..!!
கவலை வேண்டாம்..!!
ஒவ்வொரு ராசிக்கும் சனி பகவான் ஒவ்வொரு நிலையில் ஆளுமை செலுத்தி கொண்டு தான் இருப்பார்..!!
இவ்விடம்..
நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..!!
சனி போல் கொடுப்பாரும் இல்லை..
சனி போல் கெடுப்பாரும் இல்லை..!!
சனீஸ்வரன் "வேலைக்காரன்..!!"
உழைப்பின் காரகன்..!!
தொழில் காரகன்..!!!
நீதிமான்..!! நியாயஸ்தன்..!!
❤️
நம் இஷ்ட தெய்வத்தை மனதில் ஏற்றி..
நாம் அன்றாடம் செய்ய வேண்டிய நம்முடைய கடமைகளை எந்த தொய்வுமின்றி சீராக எக்குறையுமின்றி சரி வர செய்தாலே போதும்..!!
சனி பகவானின் அருள் நீக்கமற நமக்கு கிடைக்கும் தான்..!!
போலவே..
சனி பகவான் நீதிக்கு அதிபதி..!!!
எவரது உழைப்பையோ பணத்தையோ நீங்கள் அபகரித்து சுரண்டி ஏமாற்றி தின்றால்..
மிக நிச்சயமாக சனீஸ்வரனின் சபையில் மன்னிப்பே கிடையாது..!!
அதுவன்றி..
எங்கும் எதிலும் எப்போதும் நீதி நேர்மை நியாயத்தை கடைபிடித்து முடிந்த வரை எவருக்கும் தீங்கு இழைக்காத வாழ்க்கையை வாழும் போது..
உங்களுக்கு சனி பகவான் நன்மையை மட்டும் தான் செய்வார்..!!
❤️
சக மனிதனுக்கு அநீதி இழைத்து விட்டு நீங்கள் எத்தனை கடவுளை வணங்கியும் எந்த பயனும் இருக்காது..!!
ஊரை ஏமாற்றலாம்..
உலகை ஏமாற்றலாம்..
நீங்கள் அரங்கேற்றும் பொய் நாடகங்களை ஈசன் கண்டு நகைத்து கொண்டு தான் இருப்பான்..!!
தக்க சமயத்தில் தகுந்த தண்டனையும் வழங்கிடுவான்..!!
பயம் வேண்டாம்..!!
நல்லவர்க்கு எப்போதும்..
நல்லதே நடக்கும்..!!
மகிழ்ந்திருங்கள்..!!~💛🙏🏽
❤️
🙏
👍
🌺
17