
N. Chokkan
February 7, 2025 at 02:21 PM
இன்றைய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதழியலில் செயற்கை நுண்ணறிவு உண்டாக்கவிருக்கும் தாக்கங்களைப்பற்றியும் அதற்கு இதழாளர்கள் எப்படித் தயாராவது என்றும் விரிவாகப் பேசினேன். செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஓர் எளிய அறிமுகத்தைக் கொடுத்து, அதில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவற்றைச் சிக்கலில்லாத மொழியில், புரியும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்க முயன்றேன். உரை நல்லவிதமாக அமைந்தது என்பதை நிகழ்ச்சிக்குப்பின் பார்வையாளர்கள் தெரிவித்த உடனடிக் கருத்துகளிலிருந்து புரிந்துகொண்டேன்.
குறிப்பாக, நடுத்தர வயதைத் தாண்டிய பலர் இதுபற்றித் தங்களுக்கு இருந்த அச்சங்களை இந்த உரை துடைத்துவிட்டது என்றும், ஒரு தெளிவான செயற்திட்டத்தைக் கொடுத்திருக்கிறது என்றும் நெகிழ்வோடு சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி.
இந்த உரையின் முழுமையான வீடியோப் பதிவு (சுமார் 59 நிமிடங்கள்) Jairigi Views யூட்யூப் சானலில் வெளியாகியிருக்கிறது. அதற்கான இணைப்பை முதல் கமெண்ட்டில் கொடுத்துள்ளேன். பாருங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள்.
நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய நண்பர் Muthumani Nannan அவர்களுக்கு மிக்க நன்றி.
ஒளிப்பதிவு: நண்பர் Ashok Sai Ramana Thamburaj
👍
❤️
3