
N. Chokkan
1.1K subscribers
About N. Chokkan
From the desk of N.Chokkan என். சொக்கன் (Tamil, English Writer). Articles, Stories, Videos, Books, Useful Links, Book Deals, Tips, Hacks and more. As an Amazon Associate, I earn from qualifying purchases.
Similar Channels
Swipe to see more
Posts

"பணம் படைக்கும் கலை" புத்தகம் எதைப்பற்றியது? யாருக்கானது? இது பணத்தைச் சம்பாதிக்கிற, செலவு செய்கிற, வருங்காலத்துக்குச் சேமிக்கிற (அல்லது சேமிக்க விரும்புகிற) எல்லாருக்குமானது. ஒருவர் தன்னுடைய முதல் சம்பளத்தைக் கையில் வாங்குகிற கணத்திலிருந்து அவருக்குப் பணம் தொடர்பாக என்னவெல்லாம் தெரிந்திருக்கவேண்டுமோ அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் விளக்கமாகச் சேர்த்திருக்கிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால்: * சம்பளம் என்பது என்ன? அதன் பகுதிகள் என்னென்ன? அவற்றை எப்படிப் புரிந்துகொள்வது, பயன்படுத்திக்கொள்வது? * சம்பளத்தோடு வரக்கூடிய பிற வசதிகள் என்னென்ன? அவற்றை எப்படிப் புரிந்துகொள்வது, பயன்படுத்திக்கொள்வது? * மாதச் சம்பளம் இல்லாதவர்கள் (சொந்தத் தொழில் செய்கிறவர்கள், Freelancers) போன்றோர் தங்கள் பண ஓட்டத்தை எப்படி ஒழுங்குபடுத்தலாம்? * காப்பீடு ஏன் தேவை? எந்த அளவுக்குத் தேவை? அதில் வரக்கூடிய சிக்கல்கள் என்னென்ன? அவற்றைத் தவிர்பப்து எப்படி? * பணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டிய அடிப்படைப் பழக்கங்கள், செயல்திட்டங்கள் என்னென்ன? * செலவு செய்வது கட்டாயம்தான். ஆனால், அதை அறிவார்ந்தமுறையில் செய்வது எப்படி? தேவையானபோது கட்டுப்படுத்துவது எப்படி? * கடன் நல்லதா? கெட்டதா? அதைப் பயன்படுத்திக்கொள்ளும்போது நினைவில் வைக்கவேண்டிய விஷயங்கள் என்ன? * கடன் அட்டை (கிரெடிட் கார்டு) நல்லதா? கெட்டதா? அதைப் பயன்படுத்திக்கொள்ளும்போது நினைவில் வைக்கவேண்டிய விஷயங்கள் என்ன? * சேமிப்பை எங்கெல்லாம் முதலீடு செய்யலாம்? அவை ஒவ்வொன்றிலும் இருக்கும் நன்மை, தீமைகள் என்ன? * நிதித் திட்டமிடல் என்பது என்ன? அதை நாமே செய்யலாமா? அல்லது, வல்லுனரிடம் செல்லவேண்டுமா? * நிதி மேலாண்மைக்கு ரொம்ப நேரம் பிடிக்குமா? இதைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்கள்கூட அடிப்படைப் புரிந்துகொள்ளலுடன் இதை அணுகுவது எப்படி? சுருக்கமாக, நம் பணத்தை நாமே கையாள்வதற்கான, அதை வளர்த்துச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஒரு கையேடு இது. விறுவிறுவென்று கதைபோலப் படிப்பீர்கள், புரிந்துகொள்வீர்கள். ஆனால், அதன்பிறகுதான் இந்தப் புத்தகத்தின் உண்மையான பயன் தொடங்குகிறது. எப்போதும் மேசைமீது வைத்து அவ்வப்போது படித்துப் பயன்படுத்திக்கொண்டே இருப்பீர்கள். 'பணம் படைக்கும் கலை' புத்தகத்தை முன்பதிவுத் திட்டத்தில் 30% தள்ளுபடி விலையில் வாங்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்தச் சலுகை மே 31வரைதான்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி. என்னுடைய 'காந்தி யார்?' (அண்ணல் காந்தியைப்பற்றிய நூறு கேள்விகள், பதில்கள்) புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகிறது. இதை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளவர்: நண்பர் ராஜேஷ் கர்கா. தமிழில் மிக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த நூலைத் தமிழ் அறியாத பிற மொழிக் குழந்தைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் ஆசை. அதற்கான வாசல் இப்போது திறந்துள்ளது. வாழ்க காந்தி புகழ்.

https://www.zerodegreepublishing.com/collections/n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

நான் வழக்கமாகப் பயன்படுத்தும் அழகான பச்சைச் சோப்பைச் சுமாரான சந்தன வண்ணத்துக்கு மாற்றிவிட்டார்கள். வேதியியற்கலவை அதேதான் என்றாலும் கையில் பிடித்துப் பயன்படுத்தும்போது ஏமாற்றமாக இருக்கிறது. வாடிக்கையாளர் மகிழ்வை மனத்தில் கொள்ளாத இந்நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்ணடிக்கிறேன்.

#அறிவிப்பு ஜூன் முதல் வாரத்தில், 'பணம் படைக்கும் கலை' முன்பதிவுப் பிரதிகளில் கையொப்பமிடுவதற்கெனவே சென்னை வருகிறேன். இதுவரை முன்பதிவு செய்தவர்கள், இனி செய்யப்போகிறவர்கள் அனைவருக்கும் Author Signed Copies கிடைக்கும். இந்தப் புத்தகம்மட்டுமில்லை. அடுத்த ஒன்பது நாட்களுக்கு (மே 31 வரை) ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ள என்னுடைய அனைத்துப் புத்தகங்களையும் Author Signed Copiesஆகப் பெறலாம். அவற்றுக்கு 15% தள்ளுபடியும் கிடைக்கும். ரூ 400க்குமேல் புத்தகங்களை ஆர்டர் செய்யும்போது அஞ்சல் செலவும் இலவசம். நான் வருகிற நாளைப் பின்னர் அறிவிக்கிறேன். அன்றைக்கு ஜீரோ டிகிரி அலுவலகத்திற்கு வந்தால் நாம் சந்திக்கலாம், உரையாடலாம், உங்கள் புத்தகங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நூல்களுக்கான இணைப்பு கீழே உள்ளது.

'பணம் படைக்கும் கலை' நூலை முன்பதிவு செய்த பலர், 'எங்களுக்குப் புத்தகம் இன்னும் வரவில்லையே' என்று செய்தி அனுப்பிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்தப் பொதுவான பதில். இந்தப் புத்தகத்துக்கான முன்பதிவு மே 31வரை தொடரும். அதன்பிறகு சுமார் ஒரு வாரத்தில் புத்தகம் வெளியாகும். முன்பதிவுப் பிரதிகளில் கையெழுத்திடுவதற்காக நான் சென்னை வரும்போது இங்கு அறிவிக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் அதே நாளில் (ஜீரோ டிகிரி அலுவலகத்தில்) என்னிடம் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் அதே நாளில் அஞ்சல்மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும். அதாவது, ஜூன் முதல் வாரத்தில், அதிகபட்சம் 10ம் தேதிக்குள் உங்களுக்குப் புத்தகம் கிடைக்கவேண்டும். ஒருவேளை, அச்சகத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதை இங்கு தெரிவிக்கிறேன். இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளுங்கள். மே 31க்குள் முன்பதிவு செய்கிறவர்களுக்கு 30% தள்ளுபடி உண்டு, Author Signed Copyயும் கிடைக்கும். மே 31வரை என்னுடைய மற்ற புத்தகங்களுக்கும் 15% தள்ளுபடி + Author Signed Copies உண்டு. நீங்கள் அந்தச் சலுகையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ள என்னுடைய அனைத்து நூல்களுக்கான இணைப்பும் கீழே உள்ளது.

https://www.zerodegreepublishing.com/products/panam-padaikkum-kalai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-prebook

https://www.zerodegreepublishing.com/collections/n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/products/panam-padaikkum-kalai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-prebook