
N. Chokkan
February 11, 2025 at 06:58 AM
'அம்பானி: ஒரு வெற்றிக் கதை' நூலை எழுதி 21 வருடங்களாகின்றன. திருபாய் அம்பானி இறந்து 23 வருடங்கள். இன்றைக்குக் கூகுளில் அம்பானி என்று அடித்தால் முகேஷ் அம்பானியின் பெயர்தான் முதலில் வருகிறதே தவிர, திருபாய் அம்பானியின் பெயர் இல்லை. ஆனால் இன்று வரை ஓர் எழுத்தாளனாக நான் பெற்ற அனைத்துக்கும் சரியான தொடக்கம் இந்தப் புத்தகம்தான். இது அவரது தாய்மொழியிலும் (குஜராத்தி) இப்போது மொழிபெயர்ப்பாகியுள்ளது என்பது என் இன்றைய மகிழ்ச்சி.
இதையெல்லாம் சேர்த்துக் கொண்டாட ஒரு கிண்டில் சலுகைகூட இல்லாவிட்டால் எப்படி?
ரூ 99 விலையுள்ள 'அம்பானி: ஒரு வெற்றிக் கதை' கிண்டில் நூல் இன்று ஒரு நாள்மட்டும் பாதி விலையில் (ரூ 49) கிடைக்கும். இந்த விலைச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
👍
❤️
3