JK Muthu Updates
                                
                            
                            
                    
                                
                                
                                February 8, 2025 at 12:27 AM
                               
                            
                        
                            என்னுடைய ஆதங்கம், நம்பிக்கை மற்றும் கருத்தை மையப்படுத்தி இதை நானே முன்னெடுக்கிறேன், ஆம் நீண்ட சிந்தனை மற்றும் ஆலோசனைக்குப்பின் நான் தொழில் விவசாய முன்னேற்றக் கட்சியை (TVMK) பதிவு செய்து துவக்கும் முன், சமத்துவ முன்னேற்றக் கூட்டணி அமைப்பை துவக்க உள்ளேன். 
*சமத்துவ முன்னேற்றக் கூட்டணி (SMK):*
இந்த கூட்டணி அமைப்பு மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியை முன்னிலைப்படுத்தி சில அடிப்படை கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டங்களை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது.
தன்னலமற்ற, தொலைநோக்குடன் கூடிய செயல் திறன் மிக்க தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவதும், சிறந்த முற்போக்கான அரசியல் கலாச்சார மாதிரியை உருவாக்குவதும் அமைப்பின் நோக்கம். நோக்கத்தில் உடன்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைககள் இந்த அமைப்பில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்கள் பின்னர் பகிரப்படும், இந்த முன்னெடுப்பு சம்பந்தமாக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்வது எனக்கு உதவிகரமாக இருக்கும்.
நன்றி 🙏 ஜே.கே.முத்து, நிறுவனர் மற்றும் தேசிய தலைவர், சமத்துவ முன்னேற்றக் கூட்டணி.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        4