
TownNews360°
February 17, 2025 at 09:45 AM
*விமான நிலையம்- கிளாம்பாக்கம்*
*மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு*
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், கிளாம்பாக்கம் பஸ் முனையம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர், திருவிக நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் என 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.5,000 கோடி ஆகும்.