Vethathiriya Gnanakkudil
February 20, 2025 at 01:13 AM
20-02-2025
*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
❓ *கேள்வி: சுவாமிஜி, ராமா என்ற பெயரை வாயால் சொன்னால் மன அமைதி கிடைக்கும், நமக்கும் நமது குடும்பத்திற்கும் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்களே? உண்மையா?*
✅ *பதில்:* இதே போன்ற கேள்வியை அமெரிக்காவில் மன இயல் தத்துவ பேராசிரியர்களிடம் கேட்டார்கள். இந்தியாவில் ராமா, கிருஷ்ணா என்று சொல்லியே பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிக ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்களே, எவ்வாறு என்று.
அவர்கள் பரிசோதனைக்காக நான்கு அன்பர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் Heart Beat, Pulse, B.P. அனைத்தையும் குறித்துக் கொண்டார்கள். மேலும், “கொக்கோ கோலா” என்ற வார்த்தையைக் கொடுத்து ஐந்து நாட்கள் தொடர்ந்து உச்சரிக்க வைத்தார்கள். அதன் பிறகு அவர்களை பரிசோதிக்கும் பொழுது அவர்களுடைய Heart Beat, Pulse, B.P. அனைத்தும் குறைந்து இருந்தது. அவ்வாறு வார்த்தையை உச்சரித்து வரும்பொழுது பல நல்ல விளைவுகள் தோன்றியதாகக் கூறினார்கள்.
உச்சரிக்கும் வார்த்தையில் மக்களுக்கு இறை நம்பிக்கையும் சேர்ந்துள்ள போது பயன் அதிகமாகவே இருக்கும்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
(நாளையும் தொடரும்)
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
2