
Vethathiriya Gnanakkudil
1.2K subscribers
About Vethathiriya Gnanakkudil
Our mission is to implement the Vethathiri Maharishi founded World Community Service Center's, principles, policies and plans. Also to function as a Yoga & Spiritual Education Center. Vaazhga Vaiyagam Vaazhga Vaiyagam Vaazhga Valamudan Valarga Vethathiriyam
Similar Channels
Swipe to see more
Posts

*Daily A Noble Thought - May 31* *Saint Sermons* While stitching cloths for children, considering their growth, we stitch liberally. If the quality of cloth is strong, the liberalness would be bit extra. Due to this, some dress may appear as not suitable while stitching. However, over a period, they would be useful for a long time. Similarly, the virtual preaching and plans for welfare by Saints, for the people, may appear to be counted as unsuitable for time & unnecessary. As their sermon and plans are formed in broad sense considering all three schemes of past experience, present circumstances and future results, the narrow minded illusionists and common innocent men, may not be able to understand the meaning readily & easily. Great philosophers and long future, can only explain the sermons of saints clearly. *- Vethathiri Maharishi* Delhi NCR Simplified Kundalini Yoga Trust - www.fb.com/sky4peace ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

*வாழ்க்கை மலர்கள்: ஜூன் 8* *சினத்தைத் தவிர்ப்போம்* சினம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்று ஆராய்வோம். சினம் எழும்போது என்னென்ன மாறுதல்கள் உடலிலும், உள்ளத்திலும் உண்டாகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். சினத்தால் உடலிலே உள்ள உயிர்ச்சக்தி விரைவு கொள்கிறது. குருதி அழுத்தம் ஏற்பட்டு இரத்த வேகம் அதிகரிக்கிறது. கண்கள் சிவக்கின்றன. நரம்புகளில் படபடப்பு ஏற்பட்டு அவை பலவீனமடைகின்றன. இவ்வாறு பலவிதமான குறிகளைப் பார்க்கின்றோம். இதன் விளைவாக உடலிலே பல தொடர் நோய்கள் உண்டாகின்றன. கண்நோய், நாக்குப்புண், வயிற்றுப்புண், மூலம், மலச்சிக்கல் போன்ற பலவாறான நோய்கள் உருவாகச் சினம் ஏதுவாகின்றது. ஏனெனில், சினம் எழும் போது நமது ஜீவகாந்த சக்தி அதிகமாக வெளியேற்றப்பட்டால் அது உடலையும் தாக்கும், மனதையும் கெடுக்கும். சினம் என்பது என்ன என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சினமானது எவ்வளவு கொடியது என்பதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்திலே அனுபவமாகக் கிடைத்திருக்கும். சினம் எழுந்தால் அது பிறர் உள்ளத்தையும் புண்படுத்துகிறது; தன்னையும் அதாவது தன் உடலையும், தன் மனத்தையும் கேடுறச் செய்கிறது. தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்து, தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கிப் பின்னரும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு சினமாகும். நெருங்கிய நண்பர்களிடத்திலே, சுற்றத்தார்களிடத்திலே, நம்மோடு அன்பு கொண்டு நமது நலத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடத்திலே தான் அதிகமாக அடிக்கடி சினம் வருவதைப் பார்க்கிறோம். தீமை செய்தார்க்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பாடு உடைய இந்த மனித சமுதாயத்தின் உயர்விலே நல்லது செய்பவர்களுக்கும் தீமை அளிக்கும் ஒரு எண்ண வேகம், உணர்ச்சி வேகம் சினம் என்றால் கட்டாயம் அதைத் தவிர்க்கத்தான் வேண்டும். *- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி* ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

31-05-2025 *அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்* *❓ கேள்வி: சுவாமிஜி! முக்கியமான காரியங்களைத் தொடங்கும்போது வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற பஞ்ச அங்கங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்களே இது ஏன்?* ✅ *பதில்:* மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல் என்பது பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம், என்ற ஐந்தையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது. வாழ்க வளமுடன்! *அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி* (நாளையும் தொடரும்) ✖️K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

*வாழ்க்கை மலர்கள்: மே 31* *அறிஞர் போதனைகள்* சின்ன வயதுக் குழந்தைகளுக்கு உடைகளைத் தைக்கும் போது அவர்களின் வளர்ச்சியை ஞாபகத்தில் கொண்டு தாராளமாகத் தைத்துக் கொள்ளுகிறோம். துணியின் உறுதி அதிகமாக இருந்தால் இந்தத் தாராளம் சற்று அதிகமாக இருக்கும். இதனால், சில உடைகள் தைக்கும் போது பொருத்தமில்லாமலும் தோன்றலாம். எனினும், போகப்போக அதன் உபயோகம் நீண்ட காலத்திற்குப் பொருத்தமானதாகவே இருக்கும். இது போன்றே அறிஞர்கள் உலக மக்களுக்குத் தரும் அறநெறி போதனைகளும், நல்வாழ்விற்கேற்ற திட்டங்களும் அக்காலத்திற்குச் சிறிது பொருத்தமில்லாமலும், அவசியமற்றவை என எண்ணும்படியாகவும் இருக்கலாம். கடந்த கால அனுபவங்கள், எதிர்கால விளைவுகள், தற்காலச் சூழ்நிலைகள் என்ற மூன்றையும் இணைத்து யூகிக்கும் திறனான “முக்கால ஞானம்” என்ற அகன்ற நோக்கில் அவர்கள் திட்டங்களும், போதனைகளும் உருவாவதால் குறுகிய நோக்கமுள்ள மயக்கவாதிகளும், பாமரர்களும் அக்கருத்துக்களில் அடங்கியிருக்கும் நன்மைகளை உடனே எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே அத்தகைய அறிஞர்கள் கருத்துக்களைத் தெளிவாக விளக்கம் செய்ய முடியும். *- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி* ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

*Daily a Noble Thought - June 08* *Let’s neutralize Anger* Let’s analyse how anger impacts us. Should also notice what are the changes happening to body and mind when anger comes. The life force at the body gets aggravated on anger. Fore of blood circulation increases with high blood pressure. Nerves get shivering and they get weaken. We see so many indications like that. Resultantly, multiple diseases come in body. Angry becomes the reasons for several diseases such as Eye disease, Tongue disease, stomach ache and constipation. It is because, when we get angry, the biomagnetism gets expelled in excess. If bio-magnetism is expelled in excess, it would attack the Body and spoil the mind. All know well that what is angry. Everyone would have also experienced in different ways how bad the anger is. When gets anger, it injures the mind of others too; causes harm to self too, physically and mentally; Anger is a feeling of enmity harming self and others not just currently but also extending the suffering for future too. We observe that we get angry frequently with our close friends, relatives and those who love us and live with us for our welfare. At this society, which has noble culture to do good to even those who did harm to us, an emotional thought of anger which paves to do harm to even those who did good to us, to be avoided necessarily. *- Vethathiri Maharishi* Delhi NCR Simplified Kundalini Yoga Trust - www.fb.com/sky4peace ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl