Vethathiriya Gnanakkudil
February 21, 2025 at 01:40 AM
*வாழ்க்கை மலர்கள்: பிப்ரவரி 21*
*உலகை வாழ்த்துவோம்*
சாதாரணமாக இருக்கக் கூடியவர்களை வாழ்த்தும் போது நன்றி உணர்வு தான்! நமக்கு நன்மை செய்தவர்களை வாழ்த்தும் போதும் நன்றி உணர்வு தான். ஆனால் தீமை செய்யும் ஒருவனை வாழ்த்தும்போதோ அவன் நல்லவனாக மாறுகின்றான். கெடுதல் செய்பவன் ஒருவன் இந்த உலகத்தில் வளர வளர அவனிடமிருந்து வரக்கூடிய அலைகளினால் அவன் குடும்பம் அவனைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு பேரும் பாதிக்கப் படுகிறார்கள்.
அவனை நல்லவனாக மாற்றிவிட்டால், அவனைச் சூழ்ந்த அத்தனை பேருக்கும் அது பலன் தானே கொடுக்கும்? உங்கள் வாழ்த்தின் பலன் எந்த அளவு விரிந்து கொண்டே போகிறது பாருங்கள்! அப்படி இந்த உலக சமாதானம் வரவேண்டும் என்று சொன்னால், வாழ்த்தின் மூலமாகவே இந்த உலகம் முழுவதும் சேர்ந்து பலனை உணர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு தலைவர்களை வாழ்த்துவது அல்லது இன்னும் மற்ற எதிரிகளை வாழ்த்துவது என்று ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே உலக சமாதானம் வந்து விடும். அந்த அளவு ஒற்றுமை ஏற்பட்டு விடும். இதை மனம் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
3