Vethathiriya Gnanakkudil
February 22, 2025 at 01:22 AM
22-02-2025
*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
❓ *கேள்வி: ஐயா, தியானத்தை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே செய்து வந்தால் போதாதா? மன்றத்திற்கு அவசியம் வர வேண்டுமா?*
✅ *பதில்:* நாள் தோறும் குளிக்கின்றோம். ஒரு நாள் குளிக்காவிட்டால் அழுக்கும், வியர்வையும், நாற்றமும் உண்டாகின்றன. நாள் தோறும் குளித்துக் கொண்டே இருந்தால் தான் உடல் சுத்தமாக இருக்கும். இதே போல் தான் புலன்களைக் கொண்டு வாழ்வை நடத்தும் மனிதனுக்கு புலன் மயக்கத்தால், தன்னாலோ, பிறராலோ உயிரில் அழுக்குப் படிகின்றது. அந்த அழுக்கு உடல் நோய், உள்ளக் களங்கம் இவையாக மாறுகின்றன. தவமும் தத்துவ விளக்கமும் கொண்டு, அவ்வப்போதும், நாள் தோறும், வாரத்திற்கு ஒரு முறையும், உயிர்த்தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும். கூட்டுத் தவம், அருள் உரை ஆற்றல் அல்லது கேட்டல் என்பவை மூலம் மனவளக்கலை மன்ற உறுப்பினர்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி உயிர்த்தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
(நாளையும் தொடரும்)
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
🎉
3