Vethathiriya Gnanakkudil
Vethathiriya Gnanakkudil
February 24, 2025 at 01:42 AM
24-02-2025 *அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்* ❓ *கேள்வி: சுவாமிஜி, வீட்டில் தொட்டில்களில் மூலிகை வளர்க்க விரும்புகிறேன். என்ன மூலிகை வளர்க்கலாம்?* ✅ *பதில்:* மூலிகையைப் பற்றி ஒரு படிப்பு வேண்டும். அப்போது தான் அதை உபயோகிக்க முடியும். நூற்றுக்கணக்கான வியாதிகளைப் போக்கக்கூடிய தன்மை ஒவ்வொரு மூலிகையிலும் இருக்கிறது. ஒவ்வொரு மூலிகையிலும் சில இரசாயனங்கள் அமைந்திருக்கிறது. அதனால் தான் ஒரு மூலிகையை எடுத்து இதில் பொன் சத்து இருக்கிறது என்று சொல்கிறார்கள் பாருங்கள். அந்தப் பொன்னை நேரடியாக எடுத்து உபயோகிக்க யாராலும் முடியாது. இப்போது பொன்னை Homeopathy-யில் Potency செய்வதின் மூலமாக சுலபமாக உபயோகிக்கலாம். அதனால் நம் உடலுக்கு தொந்தரவு வராது. எந்த உலோகமாக இருந்தாலும் அதனுடைய நுண்ணிய அணு உடம்பில் நோயைத் தீர்க்கக் கூடியது. ஆனால் எந்த மெட்டலாக இருந்தாலும் அது கடைசியாக மலத்தில் போக வேண்டும். அல்லது சிறுநீரில் கலந்து வெளியாகி விட வேண்டும். லேசாக இருக்கும் மெட்டல் மலத்தில் போகாது. இரத்தத்தோடு கலந்து சிறுநீரில் தான் வெளியாக வேண்டும். சிறுநீரகம் அதை பிடித்து வைத்துக் கொள்ளும். அதே மெட்டலை, மூலிகை மூலமாக எடுத்துக் கொள்ளும் போது பிடிக்காது. அதனால் சித்தர்கள் மூலிகையை உபயோகிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள். துத்தநாகம், தங்கம் உள்ள மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம். வாழ்க வளமுடன்!! *அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி* (நாளையும் தொடரும்) ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏 3

Comments