Vethathiriya Gnanakkudil
Vethathiriya Gnanakkudil
February 25, 2025 at 02:01 AM
25-02-2025 *அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்* ❓ *கேள்வி: சுவாமிஜி, பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?* ✅ *பதில்:* இருப்புநிலை என்ற சுத்தவெளியின் அழுத்தத்தால் தன்னை துண்டுபடுத்திக் கொண்டு இயக்கம் பெற்றது விண்துகள். ஒன்றுக்கும் மேலான விண்துகள்கள் கூடிய கொத்து இயக்கம் காற்று எனப்படும். பதினாறு விண்துகள்கள் கூடிய கூட்டத்தை அழுத்தக் காற்று என்கிறோம். இரு வகையான காற்று மூலகங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கூடும் போது ஒன்றின் இடைவெளியை மற்றது நிரப்புகிறது. எனவே நெருங்கிய கோர்வை அமைந்து நீராகிறது. நீர் மூலகங்கள் நெருங்கி இயங்கக் கெட்டிப் பொருள் ஆகிறது. கெட்டிப் பொருளாகிய நிலம், நீர், அழுத்தக்காற்று, காற்று, விண் இவையெல்லாம் குறிப்பிட்ட விகிதத்தில் அமைந்து, இறைவெளியின் இடைவிடாத சூழ்ந்தழுத்தத்தால் கோள வடிவம் பெற்று பல கோடி அண்டங்கள் சேர்ந்தது தான் பிரபஞ்சம் எனும் பேரியக்கக் களம். அதுவே சக்தி களம். பிர என்றால் விரிந்த, பாஞ்ச் என்றால் ஐந்து, சம்ஸ்கிருத வார்த்தை. அதாவது விரிந்த ஐந்து. சுத்தவெளியெனும் ஒன்றே ஐந்தாக விரிவு பெற்றுள்ளது என்பது தான் அர்த்தம். வாழ்க வளமுடன்!! *அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி* (நாளையும் தொடரும்) ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏 3

Comments