
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
February 20, 2025 at 05:34 AM
அகத்தீசரின் அருளைப் பெற
தமிழ்நாட்டில் 1008 சிவாலயங்களை அகத்தீசர் கட்டியிருக்கின்றார்.
ஒவ்வொரு சிவாலயத்திலும் 12 தேவ ஆண்டுகள் வரை பூஜை செய்து சிவகடாட்சத்தைப் பெற்றிருக்கின்றார்.
12 தேவ ஆண்டுகள் என்பது பூமியின் காலக் கணக்கின் படி 15,00,000 ஆண்டுகள் ஆகின்றது. இவர் உருவாக்கிய கோவிலில் மூலவராக இருக்கும் ஈசனின் பெயர் அகத்தீசர் ஆகும்.
பெரும்பாலும் காவிரிக் கரையோரம் இவர் கோவில்களைக் கட்டியிருந்தாலும், தமிழ்நாடு நெடுக கட்டியிருப்பதும் உண்மையே!
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 19 வது கிலோ மீட்டர் தூரத்தில் மேலையூர் அமைந்திருக்கின்றது.
இங்கே மெயின் ரோட்டில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளிக்கு பின்புறம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் இருக்கின்றது.
மூலவருக்கு மிக அருகில் அகத்தியரின் சன்னதியும் அமைந்திருக்கின்றது. காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் அற்புதமான ஆலயம் இது
அக்யூ ஹீலிங்,பிராணிக் ஹீலிங் ,ஆல்பா தியானம், ஆழ்நிலை தியானம், வாசி யோகம், பிராணயாமம் செய்பவர்கள் தமது ஆன்மீக முயற்சியில் அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பினால் அடிக்கடி இங்கே வருகை தந்து 90 நிமிடங்கள் வரை நெய் தீபம் ஏற்றி தியானம் செய்ய வேண்டும்.
அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்று அபிஷேகமும், அன்னதானமும் செய்து வர வேண்டும்
மாதம் ஒருமுறை வீதம் 24 முறை இப்படி செய்கின்றார்களோ அவர்கள் அகத்தீசரின் அருளைப் பெறுவார்கள்
நன்றி