
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
850 subscribers
Similar Channels
Swipe to see more
Posts

https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW *தின காயத்ரி* *🪷10/06/2025🪷* *🪷செவ்வாய்க்கிழமை* *🔯காயத்ரி மந்திரம்* *ஓம் பூர் புவ ஸுவ* *தத் ஸவிதுர் வரேண்யம்* *பர்கோ தேவஸ்ய தீமஹி* *தியோ யோந ப்ரசோதயாத்..!* *🕉விநாயகர் 🕉* *🙏சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்* *ப்ரஸந்த வதநம் த்யாயேத்* *சர்வ விக்நோப சாந்தயே* *🔯விநாயகர் காயத்ரி* *ஓம் தத்புருஷாய வித்மஹே* *வக்ர துண்டாய தீமஹி* *தந்நோ தந்தி ப்ரசோதயாத்* *🔯முருகன் காயத்ரி* ஓம் கார்திகேயாய வித்மஹே வள்ளீநாதாய தீமஹி தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத் *🕉 ஓம் ஸ்ரீ (குலதெய்வம்) நமஹ* *🔯அய்யனார் காயத்ரி மந்திரம்* ஓம் தத் புருஷாய வித்மஹே பூத நாதாய தீமஹீ தந்நோ அய்யனார் ப்ரசோதயாத். *🕉 ஓம் ஸ்ரீ (இஷ்டதெய்வம்) நமஹ* *🕉தின கிழமை காயத்ரி* ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் *🕉தின திதி காயத்ரி* *(12:26pm வரை)* ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே மஹாஜ்வாலாயை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத். *(12:27pm முதல்)* ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவிப்ரசோதயாத். *🕉️நட்சத்திர காயத்ரி* *(06:59pm வரை)* ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னே அனுராதா *(07:00pm முதல்)* ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத் *🕉 நவகிரக மந்திரம்* *ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச* *குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:* *🔯 பிரம்மா காயத்ரி மந்திரம்* *ஓம் தத்புருஷாய வித்மஹே* *சதுர்முகாய தீமஹி* *தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்* *🕉மகாலட்சுமி குபேர மந்திரம்* "ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்" *🔯சிவபெருமான் காயத்ரி* *ஓம் தத்புருஷாய வித்மஹே* *மஹா தேவாய தீமஹி!* *தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்!* *🔯 மஹா விஷ்ணு காயத்ரி* *ஓம் நாராயணாய வித்மஹே* *வாசுதேவாய தீமஹி* *தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்* *🔯ஆரோக்கியம் தரும் 5 அற்புத மந்திரங்கள்* *🪷1. கணேஷ மந்திரம் :* ஓம் கம் கணபதயே நமஹ *🪷2. மகாகாளி மந்திரம்* ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயே நமஹ *🪷3. மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் :* ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் உஷ்டி வர்தனார் உர்வக்மிவ் பந்தனன் மிருத்யோர் முக்ஷிய மா மரிதாத் *🪷4. நரசிம்ம மந்திரம் :* உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் நரசிஹம் பீஷ்ணம பத்ரம் மிருத்யோர் மிருத்யும் நமாம்யஹம் *🪷5. ஆஞ்சநேயர் மந்திரம் :* ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தன்னோ ஹனுமதா பிரச்சோதயாத் *🔯கல்வியில் சிறந்து விளங்க!* *🪷ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்* *ஞானானந்தமயம் தேவம் நிர்மல* *ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்* *ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே* *🔯ஸ்ரீராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:* *ஓம் ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ* *🔯 வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றம் ஏற்பட* *🪷ஆதித்ய பைரவ மந்திரம் :* *ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய* *செளபாக்கியம் ப்ரசீத ப்ரசீத* *ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்*


*"தினம் ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்,* *மூலவர் : பூமிநாதர்.* *அம்மன்/தாயார் : அறம்வளர்த்த நாயகி.* *மண்ணச்சநல்லூர்.* *திருச்சி மாவட்டம்.* *காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.* *+91 93447-69294.* திருச்சிற்றம்பலம் சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1156289190?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN


ஸ்ரீசக்கர கோவில்கள் சூட்சுமங்கள் - 2 4. நிமிஷாம்பா கோவில் (ஸ்ரீரங்கப்பட்டணம்) இங்கு வேண்டினால், நொடியில் ("நிமிஷம்" = நிமிடம்) வேண்டுதல் நிறைவேறுகிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், விரைவான ஆற்றல் வெளிப்பாட்டிற்கான ஒரு 'பிரபஞ்ச ஆண்டெனாவாக' செயல்படுகிறது. கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சக்கரம் குவார்ட்ஸ் போன்று பிரார்த்தனைகளுடன் ஒத்திசைந்து அழுத்தத்தை ஆற்றலாக மாற்றித் தருகிறது கிரானைட் ஸ்ரீசக்கரத்தின் பின்புறத்தில் 24 நுண்ணிய லென்ஸ்கள் செதுக்கப் பட்டுள்ளன. பாரம்பரியத்தின் படி, கல்லின் கண்ணின் மூலம், காலத்தை வெல்லும் சூட்சுமம் உள்ளதால் இது கால வெளிப் பயணம் காலத்தை வெல்லுதல் போன்ற காலம் சம்பந்தப்பட்ட சக்கரமாக விளங்குகிறது நண்பகலில், சூரிய ஒளி லென்ஸ்கள் வழியாகச் சென்று, முழு 'பிந்துவை' கருவறை சுவரில் ஒரு 'ஹோலோகிராபிக் சிங்குலாரிட்டியாக' (holographic singularity) திட்டமிடுகிறது. இங்கு செய்யப்படும் பிரார்த்தனைகள் EEG ஆய்வுகளின் (NIMHANS, 2021) 'படி 40% வேகமான வெளிப்பாட்டைக்' காட்டுகின்றன. 5. காஞ்சி ஆதி கங்கை (கும்பகோணம்) கோயில் இங்குள்ள ஸ்ரீசக்கரம் மலட்டுத்தன்மையை நீக்குகிறது. சக்கரத்தின் 'பிந்து' (மையப் புள்ளி) பிரபஞ்ச கருப்பையைக் குறிக்கிறது. இங்கு பயன்படுத்தப்படும் காந்த மண் இரும்பு ஆக்சைடுகள் நிறைந்தது, இது கருவுறுதலை மேம்படுத்துவதாக ஆயுர்வேத ஆய்வுகள் கூறுகின்றன. 6. கொல்லூர் மூகாம்பிகை (கொல்லூர்) கோயில் இங்குள்ளது ஒலியை (மூகா = ஊமை → பேச்சு) வெளிப்படுத்த நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம். இங்கு வழிபடுவது விசுத்தி சக்கரத்தை (தொண்டை சக்கரம்) தூண்டுகிறது. அதனால் தான் மூகாம்பிகை கோவில் சரஸ்வதி அம்சம் என்றும் வித்யாரம்பம் செய்வதற்கான தலம் என்றும் வழக்கத்தில் உள்ளது சக்கரத்தின் வடிவியல், "ஓம்" போன்ற புனித ஒலிகளின் 'சைமடிக் வடிவங்களுடன்' ஒத்துப் போகிறது. மனித உடலின் அமைப்பை (9 அடுக்குகள் = 9 சக்கரங்கள்) பிரதிபலிக்கிறது. மாங்காடு, கொல்லூர் போன்ற கோவில்களில் மூலிகை/உலோக சக்கரங்கள் உள்ளன, அவற்றின் 'பொருள் ஒருமைப்பாட்டை' பாதுகாக்க நீர் அபிஷேகம் தவிர்க்கப்படுகிறது. தமிழ் சித்தர் சமன்பாடு (போகரின் சூத்திரம்): ஸ்ரீசக்கரம் = Σ (9 சக்கரங்கள்) × (16 கலைகள்) + (3 குணங்கள்)π 9 சக்கரங்கள்: பூபுரம் (பூமி) முதல் பிந்து (ஒற்றைப்புள்ளி) வரையிலான சடப்பொருட்களின் அடுக்குகள். 16 கலைகள்: 16 இதழ்களில் குறியிடப்பட்ட சந்திரனின் நிலைகள் (திரிபுர சுந்தரி தந்திரம்). π (பை): படைப்பின் முடிவற்ற சுழற்சி ( CERN-இன் 'குவாசார்' (QUASAR) திட்டம், ஸ்ரீசக்கரத்தின் 43 முக்கோணங்கள் 'டோராய்டல் புலங்களை' (toroidal fields) உருவாக்குவதைக் கண்டறிந்துள்ளது. இவை கால-வெளியை வளைக்கின்றன (LIGO இன்டர்ஃபெரோமீட்டர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது). ஜெருசலேம் பல்கலைக்கழகத்தின் 2023 ஆண்டு ஆய்வின் படி DNA-வை சரிசெய்யும் 'டெராஹெர்ட்ஸ் அலைகளை' (Terahertz waves) வெளியிடுகின்றன ( மறைக்கப்பட்ட மர்மங்கள் திருமியச்சூரில் நவக்கிரகங்கள் ஏன் இல்லை? இந்தக் கோயில் ஒரு 'புவிக்காந்த பூஜ்ய மண்டலத்தில்' (geomagnetic null zone - ISRO தரவு) அமைந்துள்ளது. இங்கு கிரகங்களின் ஈர்ப்பு விசைகள் ஒன்றுக்கொன்று ரத்து செய்யப்படுகின்றன. மூகாம்பிகையின் மெளன அபிஷேகம் ஏன்? இத்தலத்தின் தேவியின் 'ஸ்படிக லிங்கம்' 528 Hz (மிளிரும் அதிர்வு) அதிர்வெண்ணில் அதிர்கிறது. நீர் இந்த அதிர்வை குறைக்கும் – அதனால்தான் 'உலர் சடங்குகள்' மட்டுமே செய்யப்படுகின்றன. காமகோடியில் 3.5 சுற்றுக்கள் ஏன்? இது திருமந்திரம் 45-ல் குறிப்பிடப்பட்டுள்ள குண்டலினியின் 3.5 சுருள்களுடன் பொருந்துகிறது. "அரை-சுருள்" என்பது பிந்துவை நோக்கிய குவாண்டம் பாய்ச்சலைக் குறிக்கிறது. சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1156346457?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ


வினைகளை தீர்த்து முருகனருள் பெற பாட வேண்டிய திருப்புகழ் நாலி ரண்டித ழாலே கோலிய ஞால முண்டக மேலே தானிள ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே ஞால முண்டபி ராணா தாரனும் யோக மந்திர மூலா தாரனு நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக மேலி ருந்தகி ரீடா பீடமு நூல றிந்தம ணீமா மாடமு மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக வீசி நின்றுள தூபா தீபவி சால மண்டப மீதே யேறிய வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய் ஆல கந்தரி மோடா மோடிகு மாரி பிங்கலை நானா தேசிய மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும் ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி யம்பிகை ஞாதா வானவ ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி கால சங்கரி சீலா சீலித்ரி சூலி மந்த்ரச பாஷா பாஷணி காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூலாய் வாள்சிவ காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1156296011?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ

நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து நாளைய தினம் (10-06-2025) எப்படி இருக்கும் உங்கள் ராசிக்கு இதோ பார்கலாம்!!! **🙏நாளைய பஞ்சாங்கம்.🙏🙏** https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ வைகாசி ~ 27*~ *{10/06/2025}* *செவ்வாய்க்கிழமை*. *1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ உத்தராயணம் .* *3.ருது ~ வஸந்த ருதௌ.* *4.மாதம் ~ வைகாசி ( ரிஷப மாஸம்)*. *5.பக்ஷம் ~சுக்ல பக்ஷம் .* *6 . திதி ~ பிற்பகல் 12.26 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி* *ஸ்ராத்த திதி ~ பௌர்ணமி .* *7.நாள் ~ செவ்வாய்க்கிழமை { பௌம வாஸரம்}* *8.நக்ஷத்திரம் ~ மாலை 06.59 வரை அனுஷம் பின்பு கேட்டை* *யோகம் ~ முழுவதும் சித்தயோகம்* *கரணம் ~ வணிசை, பத்திரை* *நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & மாலை ~ 04.30 PM ~ 05.30 PM.* *ராகு காலம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM .* *எமகண்டம் ~ காலை 09.00 ~ 10.30 AM.* *குளிகை ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.* *சூரிய உதயம். ~ காலை 05.52 AM.* *சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.31 PM.* *சந்திராஷ்ட்டமம் ~ அஸ்வினி, பரணி .* *சூலம் ~ வடக்கு .*. *பரிகாரம் ~ பால்*. *. இன்று ~ .* ** செவ்வாய்க்கிழமை ஓரை** **காலை 🔔🔔** *6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌* *7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌* *8-9.சுக்கிரன்.💚 👈சுபம் ✅* *9-10.புதன். 💚 👈சுபம் ✅* *10-11.சந்திரன்.💚👈 சுபம் ✅* *11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌* **பிற்பகல் 🔔🔔** *12-1.குரு. 💚 👈 சுபம் ✅* *1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌* *2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌* **மாலை 🔔🔔** *3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅* *4-5.புதன். 💚 👈 சுபம் ✅* *5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✅* *6-7.சனி.. ❤👈 அசுபம் ❌* **நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.** **நாளைய தின சிறப்புக்கள் 💫 💫 💫** பண்டிகை 🌷 காஞ்சி குமரக்கோட்டம் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம். 🌷 குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் வாகனத்தில் பவனி வரும் காட்சி. 🌷 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் பால் குடக் காட்சி. 🌷 திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி வரும் காட்சி. 🌷 ஆழ்வார் திருநகிரி ஸ்ரீநம்மாழ்வார் பல்லக்கில் புறப்பாடு. வழிபாடு 🙏 சந்திரனை வழிபட குறைகள் நீங்கி ஐஸ்வர்யத்தையும் பெற முடியும். விரதாதி விசேஷங்கள் : 💥 பௌர்ணமி எதற்கெல்லாம் சிறப்பு? 🌟 புது ஆடை, ஆபரணம் அணிய நல்ல நாள். 🌟 கல்வி கற்க ஏற்ற நாள். 🌟 விதை விதைக்க உகந்த நாள். 🌟 மனை பணிகளை தொடர சிறந்த நாள். **நாளைய (10-06-2025) ராசி பலன்கள்** மேஷம் மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட தூரப் பயணங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி பிரச்சனைகளால் செயல்களில் தாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் அஸ்வினி : அலைச்சல்கள் ஏற்படும். பரணி : அனுசரித்துச் செல்லவும். கிருத்திகை : தாமதம் உண்டாகும். --------------------------------------- ரிஷபம் ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். பிரீதி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : குழப்பங்கள் விலகும். ரோகிணி : முடிவு கிடைக்கும். மிருகசீரிஷம் : லாபம் மேம்படும். --------------------------------------- மிதுனம் மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல்கள் அமையும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும். திருவாதிரை : அனுகூலமான நாள். புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும். --------------------------------------- கடகம் கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் புனர்பூசம் : சந்திப்பு உண்டாகும். பூசம் : தெளிவு கிடைக்கும். ஆயில்யம் : சஞ்சலங்கள் விலகும். --------------------------------------- சிம்மம் சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் அமையும். புதிய வியாபாரம் நிமித்தமான கடன் சார்ந்த உதவிகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் உற்சாகத்தைத் தரும். உத்தியோகம் நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் மகம் : சாதகமான நாள். பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும். உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். --------------------------------------- கன்னி கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 பயணங்களின் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு ஏற்படும். குறுந்தொழில் தொடர்பான செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சோர்வு விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் உத்திரம் : அனுபவங்கள் அதிகரிக்கும். அஸ்தம் : பிரச்சனைகள் குறையும். சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். --------------------------------------- துலாம் துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 வருவாய் குறித்த எண்ணங்கள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் சாதகமாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பைத் தரும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்த நிலைகள் விலகும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சித்திரை : வரவுகள் சாதகமாகும். சுவாதி : அனுபவம் ஏற்படும். விசாகம் : புரிதல் அதிகரிக்கும். --------------------------------------- விருச்சிகம் விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 சிறுதூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். மனதளவில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான தேடல்கள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் விசாகம் : நெருக்கடிகள் உண்டாகும். அனுஷம் : தேடல் அதிகரிக்கும். கேட்டை : சோர்வான நாள். --------------------------------------- தனுசு தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய வகை உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் புதிய நம்பிக்கை உண்டாகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : கருத்துகளில் கவனம் வேண்டும். பூராடம் : வரவுகள் கிடைக்கும். உத்திராடம் : நம்பிக்கை மேம்படும். --------------------------------------- மகரம் மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 இழுபறியான வரவுகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வழக்குகளில் மாற்றங்கள் ஏற்படும். பகை விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : வரவுகள் கிடைக்கும். திருவோணம் : குழப்பங்கள் நீங்கும். அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும். --------------------------------------- கும்பம் கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 அனுபவ செயல்களால் நட்பு வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலப் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் ஆதரவு மேம்படும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த தடைகள் குறையும். மறதி விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம் அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும். சதயம் : ஆதரவு மேம்படும். பூரட்டாதி : தடைகள் குறையும். --------------------------------------- மீனம் மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாதப் பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும். உத்திரட்டாதி : பேச்சுக்களில் கவனம் வேண்டும். ரேவதி : ஆதரவான நாள். --------------------------------------- சங்கத்தமிழ் சிவசக்தி குழு👇 https://primetrace.com/group/2243661/post/1156271260?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ

சங்கத்தமிழ் சிவசக்தி குழு https://kutumb.app/3f179095fd0f?ref=DG4CJ&screen=star_share பகளாமுகீ தேவி மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. பொதுவாகவே மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய பல ஆலயங்களை அவர் நிறுவியதாக ஒரு கருத்து உண்டு. அவற்றில் ஒன்றுதான் பகளாமுகி தேவி ஆலயம் ஆகும். அந்த ஆலயம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள நல்கேடா என்ற சிற்றூரில் அமைந்து உள்ளது. தாந்த்ரீக அடிப்படைக் கொண்ட மகாவித்யா எனும் தச வித்தியா சாதனாவில் பத்து தேவிகள் உள்ளனர். அந்த பத்து தேவிகளும் பார்வதி தேவியின் பல்வேறு தாந்த்ரீக பெண் ஸ்வரூபங்களே ஆகும். நர்மதாவின் கிளை நதியான லகுந்தார் என்ற நதியின் கரையைத் தொட்டபடி உள்ள இந்த ஆலயமும் சக்தி பீடங்களில் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். உலகிலேயே ஓரிரு பைரவர் ஆலயத்தைத் தவிர அனைத்து தாந்த்ரீக மற்றும் மாந்த்ரீக சக்திகளைத் தரும் ஆலயங்கள் அனைத்துமே பெண் தெய்வங்களை மூலமாகக் கொண்ட ஆலயமாகவே உள்ளது. அதில் முக்கியமானது பகளாமுகி தேவி ஆலயமும் ஒன்றாகும். பகளாமுகி என்றால் கொக்கு முகத்தவள் என்று பொருள்படும். இந்த ஆலயத்தின் மிக அருகிலேயே நான்கு பக்கங்களிலும் மயானங்கள் உள்ளன. நான்கு பக்கங்களிலும் மயானங்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலையில் எந்த ஒரு ஆலயமும் எந்த ஒரு இடத்திலும் அமைந்திருக்கவில்லை. பகளாமுகி தேவி ஆலயத்தைப் பற்றி சிறு வரலாறு அங்குள்ள ஒரு கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது. மற்றபடி ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்ற விவரம் இல்லை. அனைத்து செய்திகளுமே அங்குள்ள பண்டிதர்கள் மற்றும் கிராமத்தினர் தரும் வாய்மொழிச் செய்திகளே. ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவிக்கு மூன்று கண்கள் உள்ளன. மந்திர தந்திர சக்திகளின் தெய்வமான அவள் மேனி பொன்னிறமானது. அவளுக்கு பிடித்த வண்ணம் மஞ்சள் நிறம். இங்குள்ள ஆலயத்தில் உள்ள பகளாமுகி தேவி மூன்று கண்களை மட்டும் அல்ல மூன்று முகங்களையும் கொண்ட பகுளாமுகி தேவியாக காட்சி தருகின்றாள். பகளாமுகி தேவியின் சிலை பூமியில் இருந்து தானாக வெளி வந்தது எனவும் கூறப்படுகின்றது. பகளாமுகி தேவி மூன்று தேவிகள் உள்ளடங்கிய தெய்வம், அதாவது பகளாமுகி தேவி, தேவி மகாலஷ்மி மற்றும் தேவி சாமுண்டா என்றும் அப்படிப்பட்ட தேவியை தன்னுள் இருந்து பார்வதி தேவியே படைத்து அனுப்பி உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் வேறு சிலரோ உலகில் சத்யுகத்தில் விளங்கிய தீமைகளை அழிக்க பகளாமுகி தேவிக்கு பரமசிவனின் மூன்று கண்களின் அபார சக்தியை தந்து அனுப்பியதாகவும் அதை வெளிப்படுத்தும் விதமாகவ பகளாமுகி தேவிே மூன்று கண்கள் மற்றும் மூன்று முகங்களைக் கொண்டு அங்கு காட்சி தருகின்றாள் என்றும் பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். பகளாமுகி தேவியின் பிராகாரத்தைச் சுற்றி பதினாறு தூண்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அந்த தூண்கள் அனைத்தும் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கியவை. அந்த சக்திகள் பகளாமுகி தேவியின் சக்திகள் என்றும் அந்த சக்திகள் தினமும் தொடர்ந்து அந்த தூண்களில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டு அந்த கருவறையை சக்திகள் அடங்கிய அறையாக வைத்துள்ளதாகவும் அந்த சக்திகளையே அங்கு வந்து சாதனாக்களை செய்யும் சாதனாத்விகள் அங்குள்ள பகளாமுகி தேவியின் அருள் கிடைத்ததும் தம்முள் கிரகித்துக் கொள்வதாகவும் நம்பிக்கை உள்ளது. ஆகவேதான் இங்கு வந்து பகளாமுகி தேவியை வழிபட்டுவிட்டு செல்லும் பக்தர்களின் உடலில் அந்த சக்தி புகுந்து கொண்டு விடுவதினால் அவர்களை எந்த தீய சக்தியாலும் எந்த தீமைகளையும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் தீய எண்ணங்களை மனதில் ஏந்திக் கொண்டு அந்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக அங்கு வந்து சாதனாக்களை செய்பவர்களுடைய எண்ணம் நிறைவேற பகுளாமுகி தேவி அருள் புரிவது இல்லை. அவர்களுக்கு தந்திர சக்திகள் கிடைப்பது இல்லையாம். இங்குள்ள ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவியின் சிலை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆராய்சியாளர்களும், வரலாற்று வல்லுனர்களும் கூறினாலும், அது உண்மை அல்ல மகாபாரத யுத்தம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்பதினால் பாண்டவர்கள் வந்து வழிபட்ட பகளாமுகி தேவி சிலையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். பகளாமுகி தேவியின் மந்திரத்தை உச்சாடனம் செய்து வந்தால் எதிரிகள் அழிவார்கள். இந்த தேவிக்கு வாக்கு வன்மையை அடக்கும் சக்தி உள்ளது என்பதினால் அலுவக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் மற்றும் தேர்வுகளில் வெற்றி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பலவிதமான பிரிவினர் பகளாமுகி தேவி மந்திரத்தை உச்சாடனம் செய்து துதிக்கின்றார்கள். மேலும் தனது பக்தர்களிடம் அவர்களது விரோதிகள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள் அகலவும், பக்தர்களின் ஏமாற்றங்கள் அவர்களை பாதிக்காமல் இருக்கவும் பகளாமுகி தேவி வகை செய்கின்றாள். பகளாமுகி காயத்ரி ஓம் பகளாமுக்யை ச வித்மஹே சதம்பின்யை ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே மஹாஸ்தம்பிணி தீமஹி தன்னோ பகளா ப்ரசோதயாத் ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே பகளாமுகி ச தீமஹி தன்னோ அஸ்த்ர: ப்ரசோதயாத் பகளாமுகி மூல மந்திரம் ஓம் ஹ்ரீம் பகளாமுகீ சர்வ துஷ்டானாம் வாசம் முகம் ஸ்தம்பய, ஜிஹ்வாம் கீலய கீலய புத்திம் நாசய நாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹ || சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1156346377?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ


வைகாசி சுக்ல பௌர்ணமி தினத்திற்கான விஷ்ணு ஸ்லோகம் மற்றும் பாராயண வகைகள் பற்றிய பதிவுகள் : விஷ்ணு ஸ்லோகம் - பாராயணத்திற்கு ஏற்றது. ஓம் நமோ நாராயணாய தினமும் 108 முறை ஜபம் செய்தால், மன நிம்மதி, குறைவற்ற அருள் கிடைக்கும். ஸ்ரீ விஷ்ணு அஷ்டோதர சதநாமாவளி (108 நாமங்கள்) இதை பௌர்ணமி தினம் பாராயணம் செய்தால், விஷ்ணுவின் முழு அருள் கிடைக்கும். முதல் 10 நாமங்கள் : 1. ௐ விஷ்ணவே நம꞉ 2. ௐ லக்ஷ்மீபதயே நம꞉ 3. ௐ ஜநார்த்தனாய நம꞉ 4. ௐ வாமநாய நம꞉ 5. ௐ ஸ்ரீதராய நம꞉ 6. ௐ ஹரயே நம꞉ 7. ௐ கேசவாய நம꞉ 8. ௐ மாதவாய நம꞉ 9. ௐ கோவிந்தாய நம꞉ 10. ௐ நாராயணாய நம꞉ பாராயண வகைகள் (பௌர்ணமி தினம் செய்ய ஏற்றவை) 1. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் இது 1000 நாமங்களை கொண்டது. தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது. பௌர்ணமி தினம் முழுமையாக ஓதினால், பாவவிமோசனம் கிடைக்கும். 2. நாராயணீயம் பகவத்கீதையின் சாரத்தை கொண்டு உருவாக்கப்பட்ட நூல். 1034 ஸ்லோகங்கள் கொண்டது. நாள்தோறும் ஒரு பகுதி (தசகம்) படிக்கலாம். 3. பகவத்கீதை பாராயணம் 18 அதிகாரங்களையும் 700 ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. பௌர்ணமி தினத்தில் குறைந்தது 12ஆம் அதிகாரம் (பக்தி யோகம்) படிக்கலாம். சங்கத்தமிழ் சிவசக்தி குழு👇 https://primetrace.com/group/2243661/post/1156347225?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ


வைகாசி சுக்ல பக்ஷ பௌர்ணமி விரதத்தின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் : வைகாசி மாதம் வளர்பிறை பௌர்ணமி தினம், தமிழ் ஆண்டில் ஒரு புனிதமான நாள். இந்த நாளில் சந்திரன் தனது முழு வடிவத்தில் காட்சியளிக்கிறான். சுக்ல பக்ஷ பௌர்ணமி என்பது ஆன்மீக ரீதியாகவும், சடங்கு ரீதியாகவும் உயர்ந்த நிலை வாய்ந்தது. இது விஷ்ணு பகவானின் அருள் பெற முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த தினத்தின் ஆன்மீக சிறப்புகள் 1. பவித்ர நாள்: இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் விஷ்ணு, லட்சுமி, மற்றும் சிவனை வழிபட்டால், பாவங்கள் நீங்கி ஆனந்தம் பெற முடியும். 2. தர்ம க்ரியைகள்: தர்மம், புண்ணியம் செய்ய சிறந்த நாளாக இது கருதப்படுகிறது. யாத்திரை, தர்மதானம், விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம் பாராயணம் போன்றவை நடத்தப்படுகின்றன. 3. தர்மநிதி தரும் நாள்: இந்த தினத்தில் புனித நதிகளில் நீராடினால் தீர்த்த யாத்திரையின் பலன் கிடைக்கும். குறிப்பாக கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற புனித நதிகளில் பவித்திர ஸ்நானம் செய்து பூஜைகள் செய்யப்படுகிறது. 4. திருக்கார்த்திகை போன்ற முக்கிய விழாக்களின் ஆரம்பம் அல்லது நிறைவு: சில இடங்களில், வைகாசி பௌர்ணமி அன்று கார்த்திகை வழிபாடு, சக்தி வழிபாடுகள், அம்மன் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. 5. அனுகிரகம் பெருக்கும் நாள்: குளிர்ந்த நிலவு, சாந்தம் அளிக்கும் சக்தி, மனதுக்கு அமைதி தரும். இதனால் ஆன்மிக நோக்கத்துடன் தவம் செய்ய, ஜபம் செய்ய ஏற்ற நாள். விரத முறைகள் • காலையில் நீராடி சுத்த உடையில் விரதம் தொடங்க வேண்டும். • விஷ்ணுவை அல்லது தம் குலதெய்வத்தை பூஜை செய்ய வேண்டும். சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1156347046?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ


🙏🙏 ¸.* *உ* *.¸ 🙏🙏 *✍ சிவமயம்✍* *காலை சூரிய உதயத்தில்:"* *தினம் ஒரு சிவலிங்க தரிசனம்* ━━━━━━◈━━━━━━ *அவனருளாலே எல்லாம் சிவன் செயல் என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை!* *இன்றைய நாள் இனிய நாளாக நமது குழுவில் பயணிக்கும் அனைவர் வாழ்விலும் மலர அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் நம்பெருமான் சிவபெருமானின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வேண்டுகின்றேன்!”* *நமது ஆன்லைன் குழுவில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்👇* https://kutumb.app/3f179095fd0f?ref=DG4CJ&screen=star_share https://kutumb.app/fdd12e0fd49b?ref=DG4CJ&screen=star_share


நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து வைகாசி பௌர்ணமி நாளில் இதில் வேண்டுதலை எழுதி வைத்தால் போதும் விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும். https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW அமாவாசை, பௌர்ணமி என்பது பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் சிறப்பு மிகுந்த மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் வைகாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது ஜூன் மாதம் பத்தாம் நாள் வருகிறது. அன்றைய நாளில் நாம் எந்த முறையில் நம்முடைய வேண்டுதலை வைத்தோம் என்றால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். **வேண்டுதலை நிறைவேற்றும் வழிபாடு** பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு. அதிலும் வைகாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு கூடுதல் சிறப்பு இருக்கிறது என்று கூறலாம். அதே போல் எப்பொழுதும் விசாக நட்சத்திரமும் பௌர்ணமியும் ஒன்றாக சேர்ந்து வந்து வைகாசி விசாகம் ஆக தான் நாம் வழிபாடு செய்வோம். ஆனால் இந்த வருடம் விசாக நட்சத்திரம் முடிந்த பிறகு தான் பௌர்ணமி திதி தொடங்குகிறது என்பதால் ஜூன் மாதம் பத்தாம் தேதி பௌர்ணமி என்பது முழுமையாக இருக்கிறது. அந்த நாளில் நாம் எந்த முறையில் நம்முடைய வேண்டுதலை வைக்க பிரபஞ்சம் அந்த வேண்டுதலை நிறைவேற்றும் என்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம். பௌர்ணமி தினத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து வீட்டு பூஜை அறையில் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி வெள்ளை நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் அன்று முழுவதும் எரிவதைப்போல பார்த்துக்கொள்ளுங்கள். இதே போல் நம்முடைய வீட்டு சமையலறையிலும் நம்முடைய வீட்டின் வடமேற்கு பகுதியிலும் நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். இந்த இரண்டு தீபங்களும் காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை முழுமையாக ஒரு மணி நேரம் எரிய வேண்டும். அடுத்ததாக அன்றைய தினத்தில் நம் அணியக்கூடிய ஆடை என்பது வெண்மை அதிகமாக இருக்கக்கூடிய ஆடையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அன்றைய தினம் சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். சந்திர பகவானுக்குரிய நிறமாக வெள்ளை நிறம் திகழ்கிறது என்பதால் தான் வெள்ளை நிற ஆடையை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. காலையில் இந்த தீபங்களை ஏற்றி வைத்த பிறகு ஒரு பிரியாணி இலையை எடுத்து அதில் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டதாக எழுதி முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்துவிட்டு அந்த பிரியாணி இலையை சிவபெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் விரைவிலயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் நம்மால் இயலும் பட்சத்தில் வறுமையில் வாடுபவர்களுக்கு தயிர் சாதம் போன்றவற்றை தானமாக தர வேண்டும். இப்படி தருவதன் மூலமும் சந்திர பகவானின் அருளை நம்மால் பெற முடியும். அன்றைய தினம் குலதெய்வ வழிபாட்டை மறவாமல் மேற்கொள்வதன் மூலம் குலதெய்வ அருளையும் பெற முடியும். https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW பௌர்ணமி தினத்தில் இந்த முறையில் நாம் வழிபாடுகளையும் வழிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் பிரபஞ்ச பேராற்றலை விரைவில் பெற முடியும். வேண்டுதலையும் நிறைவேற்ற முடியும். சந்திர பகவானின் அருளையும் பெற முடியும் சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1156271067?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ