⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
February 21, 2025 at 07:30 AM
https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l இந்த நாள்களில் சிகிச்சை தொடங்கினால் பலன் நிச்சயம்! பிணிகள் குணமாக... உக்ரயோக நாள்கள்... வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் - பிணிகள் எந்தெந்த நட்சத்திர நாள்களில் உண்டா கின்றன என்பதைக் கொண்டு... அந்தப் பிணிகள் குணமாகுமா? அது குணமாவதற்கு எத்தனை காலம் பிடிக்கும் எனப் போன்ற கணிப்புகளையும் ஜோதிட சாஸ்திரம் விவரிக்கிறது. மருத்துவ சிகிச்சையோடு தொடர்புடைய ஜோதிடத் தகவல்கள் நமது பழைமையான நூல்களில் உள்ளன. சிகிச்சையைத் தொடங்க ஏற்ற நட்சத்திரங்கள், எந்த நாளில் பிணி உபாதை தொடங்கினால் தொடர் சிகிச்சை தேவைப்படும் எனப்போன்ற தகவல்களை அறிவோம். நவீன காலத்தில் பலவிதமான அறிவியல் இயந்திரங்களின் உதவியோடு நோய்களைப் பற்றி அறிந்து மருத்துவம் செய்கிறார்கள். ஆனால், இப்படியான எந்தவித வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், நம் ரிஷிகள் தவம் எனும் சீரிய சக்தியால் நவ கோள்களையும் சாட்சியாக்கி, மனிதனுக்கு உண்டாகும் நோய் முதலான அத்தனை பாதிப்புகளையும், அவற்றை குணமாக்குவதற்கான கால நேரத்தையும், வழிமுறைகளையும் மிகத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பது வியப்புக்கு உரியது. நோய் குறித்து அறிய குறிப்பிட்ட ஜோதிடக் கூறுகள் விளக்கப் படுகின்றன. ஜாதகத்தில் பாவத்தில் உள்ள கிரகம், பாவாதிபதி, பாவத்தைப் பார்க்கும் பிற கிரகங்கள், பாவாதிபதியைப் பார்க்கும் பிற கிரகங்கள், 6-ம் பாவத்தின் இயற்கை காரகர்களாகிய சனி மற்றும் செவ்வாயின் நிலை, லக்னம் - லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனம் போன்ற ஜோதிடக்கூறுகளைக் கொண்டு பிணிகளின் நிலை குறித்து கணிப்பது உண்டு. பிணிகளும் நட்சத்திரங்களும்... பிணிகள் எந்தெந்த நட்சத்திர நாள்களில் உண்டா கின்றன என்பதைக் கொண்டு... அந்தப் பிணிகள் குணமாகுமா? அது குணமாவதற்கு எத்தனை காலம் பிடிக்கும் எனப் போன்ற கணிப்புகளையும் ஜோதிட சாஸ்திரம் விவரிக்கிறது. அஸ்வினி 25 நாள்களில் குணமாகும். கார்த்திகை 5 அல்லது 7 நாள்களில் குணமாகும். இல்லையெனில் 21 அல்லது 27 நாட்களுக்குள் குணமாகிவிடும். ரோகிணி 8 அல்லது 11 நாள்களில் குணமாகும். மிருகசீரிடம் 6 அல்லது 9 நாள்களில் குணமாகும். புனர்பூசம் 13, 15 அல்லது 27 நாள்களில் குணமாகும். பூசம் 3 அல்லது 7 நாள்களில் குணமாகும். பூரம் 7 நாள்களில் குணமாகும். உத்திரம் 8, 9, 21 நாள்களில் குணமாகும். அஸ்தம் 7 அல்லது 20-ம் நாளில் குணம். சித்திரை 8 அல்லது 27-ம் நாளில் குணம். சுவாதி 10 அல்லது 45 நாளில் குணமாகும். மூலம் 10 அல்லது 27 நாள்களில் குணமாகும். பூராடம் 6 அல்லது 9 நாள்களில் குணமாகும். அல்லது 8-9 மாதங்கள் ஆகலாம். திருவோணம் 8 நாள்களில் குணமாக வாய்ப்பு உண்டு. எனினும் முழுமையாக பிணியி லிருந்து விடுபட ஒருவருட காலம் பிடிக்கும். சதயம் 13 நாள்களில் குணமாகும். உத்திரட்டாதி 14 நாள்களில் குணம் ஆகும். அல்லது பல வருடங்கள் அந்தப் பிணியால் துன்பம் அடைய நேரிடும். ரேவதி 8, 14 அல்லது 27 நாள்களில் குணமாகும். எனினும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிணிகள் தொடங்கிய சரியான நட்சத்திர நாளை அறிந்தால்தான், மேற்சொன்ன பலன்களைக் கணிக்கமுடியும். சிகிச்சையை ஆரம்பிக்க நட்சத்திர குறிப்புகள்... நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள்: அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய 16 நட்சத்திரங்கள். சாதாரண காய்ச்சல் போன்ற உபாதைகள் பூரம், பூராடம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திர நாட்களில் வந்தால் மட்டும் சிகிச்சை தேவை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். மேலும், ஒருவரது ஜன்ம நட்சத்திரம் அல்லது அந்த நட்சத்திரத்துக்கு 3, 5, 7-வது நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களிலும் நோய் ஏற்பட்டால், துன்பம் மிகும். சிகிச்சை தேவைப்படும். கவனிக்கவேண்டிய திதிகள் ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி ஆகியவற்றுடன் திருவாதிரை யோ, ஆயில்யமோ, மக நட்சத்திரமோ சேர்ந்துள்ள நாளில் உடல் நலம் குன்றினால், தொடர் சிகிச்சை அவசியம் தேவை.அதேபோன்று, கீழ்க்காணும் அமைப்புள்ள நாட்களிலும் உடல் நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவ சிகிச்சை அவசியப்படும். செவ்வாய் - நவமி - கேட்டை, சுவாதி, பரணி. சனிக்கிழமை - சதுர்த்தசி - பூரம், பூராடம், பூரட்டாதி. உக்ர யோக நாள்கள் உக்ர யோகம் உள்ள நாட்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் நோய் நிச்சயம் குணமா கும். கீழ்க்காணும் நட்சத்திரங்கள்- திதிகள் இணையும் நாள் உக்ரயோகம் கூடிய தினமாகும். நட்சத்திரம் - திதி 1. ரோகிணி- திருதியை, நவமி 2. உத்திரம்- சதுர்த்தி 3. திருவோணம்- பஞ்சமி 4. மிருகசீரிடம்- சஷ்டி 5. ரேவதி- சப்தமி 6. கிருத்திகை- நவமி 7. பூசம்- தசமி 8. அனுஷம்- துவாதசி,திருதியை 9. கிருத்திகை, மகம்- திரயோதசி இவையாவும் ஜோதிடம் சார்ந்த விளக்கங்களே. அவசரமற்ற தொடர் சிகிச்சைகளுக்கான கணிப்புகளை முன்னோர்கள் இங்ஙனம் சொல்லிவைத்துள்ளார்கள். மற்றபடி, அவசர அவசிய சூழலில் நாள்-நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதும், சிகிச்சையை ஆரம்பிப்பதும் நன்று. நன்றி...

Comments