Haranprasanna
March 1, 2025 at 03:39 PM
ஸெலன்ஸ்கி டிரம்ப் வீடியோ – எனக்கு ஸெலன்ஸ்கி புடின் இருவர் மீதும் ஆதரவோ நிலைப்பாடோ கிடையாது என்றாலும், போர் நிற்க வேண்டியது அவசியம் என்ற பொதுவான கருத்தின் மீது உடன்பாடு உண்டு என்றாலும், டிரம்ப்பின் மீது பெரிய அபிப்பிராயம் எல்லாம் கிடையாது என்றாலும், டிரம்ப் ஸெலன்ஸ்கியுடன் பேசிய வீடியோ கடும் எரிச்சலை உண்டாக்கியது. குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் டிரம்ப் பேசுவது, அமெரிக்கா முன்னிலும் உலகின் முன்னிலும் தான் எவ்ளோ பெரிய ஆள் என்று காட்டுவதற்காக மட்டுமே என்று தோன்றியது. ஸெலன்ஸ்கி என்ன சொல்வது என்றே தெரியாமல் தடுமாறினார். அவர் சொல்லும் வார்த்தைகள் அவருக்கே தன்னம்பிக்கை இன்றி ஒலித்தன. ஸெலன்ஸ்கி போன்றவர்களுக்கு இந்தக் கதிதான் சரி என்று பலர் எழுதினாலும், டிரம்ப் நடந்துகொண்ட விதம் அநாகரிமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இது கார்ப்பரேட் மேனேஜர் எம்ப்ளாயி மீட்டிங் அல்ல. இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு.
👍
❤️
3