Aanthai Reporter News Channel
March 1, 2025 at 05:06 AM
🦉போப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக பிரச்னை சரியாகி வருகிறது. தற்போது நுரையீரல் வீக்கம் சரியாக வருகிறது.
இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனைகள் மூலம் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குணமடைந்து வருவதால் போப் மருத்துவமனை அறையில் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.