Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
March 1, 2025 at 07:46 AM
🦉திருநெல்வேலியில் நடைபெற்ற மதன் மோகன் மாளவியா வித்யா கேந்திரம் 33-ஆவது ஆண்டு விழாவில் கவர்னர் ரவி , பிரிட்டிஷ் ஆட்சியின்போது பாரதத்தின் கலாசாரம் மற்றும் கல்வி முறையைப் பாதுகாப்பதில் மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியா தொலைநோக்குப் பங்களிப்புகளையும், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிந்தைய பாரதத்தில் நமது கல்வி முறையை காலனித்துவத்திலிருந்து விடுவிப்பதில் தென் தமிழ்நாட்டில் மதன் மோகன் மாளவியா வித்யா கேந்திரத்தின் நிறுவனர் ஸ்ரீ பாஸ்கர் ராவ் அவர்களின் தொலைநோக்குப் பங்களிப்புகளையும் எடுத்துரைத்தார். இந்திய ஞான முறையை மீட்டெடுக்கவும், நமது ஆன்மிக மற்றும் கலாசார அடையாளத்துக்குப் புத்துயிரூட்டவும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், தன்னம்பிக்கை நிறைந்த பாரதத்துக்கு அடித்தளமிட்டன. இன்று, பிரதமர் மோடி , பாரதத்தை ஒரே குடும்பமாகக் கருதி, நமது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்ளும் உணர்வையும், நமது எதிர்காலத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தி, நமது தேசிய இலக்கை #விஸ்வகுரு பாரதம் ஆக மாற்ற உறுதிபூண்டுள்ளார். #காசிதமிழ்சங்கமம் போன்ற முன்முயற்சிகளும் #என்இபி2020 போன்ற சீர்திருத்தங்களும் #வளர்ச்சியடைந்தபாரதம்2047 என்பதை நோக்கிய நமது பணியை துரிதப்படுத்துகின்றன.இளைஞர்களை தேசத்தின் மிகப்பெரிய சொத்து என்று அழைத்த கவர்னர் ரவி , இந்த மாற்றத்தின் உந்து சக்தியாக அவர்கள் இருக்க வேண்டும் எனக் கூறினார். தங்களின் பயணத்தில் கடின உழைப்பு, சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை தூண்களாகவும் அவற்றின் உச்சமாக தேசியப்பொறுப்பை கொண்டிருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

Comments