
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
February 26, 2025 at 05:35 PM
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பமேளாவின் நிறைவு நாளான இன்று, சிவராத்திரி நன்னாளில் விசுவ ஹிந்து பரிஷத் தென் தமிழகம் சார்பாக ஐந்து சிவாலயங்களுக்கு பாதயாத்திரை ஆக சென்று அர்ச்சனை பொருட்களை வழங்கி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி இந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில், ஸ்ரீ எறும்பீஸ்வரர் கோவில் மற்றும் திருநெடுங்குள நாத சுவாமி கோவில் ஆகிய ஐந்து சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யும் நிகழ்ச்சி ஆகும்.
இதில் விசுவ ஹிந்து பரிஷத்தின் சம்யுக்த ப்ராந்த தர்ம பிரச்சார் அமைப்பாளர் ஸ்ரீமான்.சேதுராமன் ஜீ தலைமையில், திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன், திருச்சி விபாக் பஜ்ரங்தள் பொறுப்பாளர் சப்தரிஷி,மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி,மாவட்ட இணை செயலாளர் யுவராஜ் மற்றும் ப்ரகண்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.*மொத்தம் 26 கிலோமீட்டருக்கு இந்த சிவாலய பாதயாத்திரை நடைபெற்றது*.