
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
May 30, 2025 at 04:09 PM
*நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து*
**பௌர்ணமி அன்று இந்த ஒரு செடியை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களுக்கு எப்பேர்பட்ட வறுமையாக இருந்தாலும் அவை நீங்கி படிப்படியாக செல்வ வளம் அதிகரிக்கும்.**
நன்றாக வாழ்ந்த குடும்பம், செல்வ செழிப்பிற்கு எந்தவித பஞ்சமும் இல்லாமல் இருந்தவர்கள், திடீரென்று ஏதோ ஒரு சூழ்நிலையால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வதற்கே வழியில்லாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர் தங்களுடைய இழந்த செல்வத்தை திரும்பப் பெறுவதற்கும், அதே சமயம் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் இந்த ஒரு செடி வரப்பிரசாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட செடி என்ன என்றும் அதை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செல்வ செழிப்பை பெற பரிகாரம்
நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒவ்வொரு செடிகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. தெய்வீக ஆற்றல் நிறைந்த செடிகள் என்ற சில செடிகள் இருக்கின்றன. வாஸ்துரீதியாக இருக்கக்கூடிய தோஷத்தை நீக்கக்கூடிய செடிகள் என்றும் சில செடிகள் இருக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தக்கூடிய செடிகள் என்றும் சில செடிகள் இருக்கின்றன. இதே போல் தான் நம்முடைய வறுமை நிலையை நீக்கி செல்வ வளத்தை அதிகரிப்பதற்கும் சில செடிகள் இருக்கின்றன. அந்த செடிகளில் ஒரு செடியை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
பொதுவாக நாம் செய்யக்கூடிய செயல்களில் நமக்கு வெற்றிகள் உண்டாக வேண்டும் என்றால் வெற்றிலையை நாம் பயன்படுத்துவோம். வெற்றிலை தீபம் ஏற்றுவது, வெற்றிலை மாலை கட்டி தெய்வங்களுக்கு சாற்றுவது அல்லது வெற்றிலை பிரசன்னம் பார்ப்பது என்று வெற்றிலையை பயன்படுத்தி பல விதங்களில் நாம் வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வோம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த வெற்றிலை கொடியை தான் நாம் நம்முடைய வீட்டில் வாங்கி வைத்து வளர்க்க வேண்டும்.
மகாலட்சுமியின் அம்சம் கொண்ட வெற்றிலை என்பது இரண்டு வகைகளில் இருக்கும். ஒன்று சாதாரணமான வெற்றிலை மற்றொன்று கருவெற்றிலை என்று கூறுவார்கள். இதில் நாம் நம்முடைய வீட்டில் வைத்து வளர்க்க வேண்டிய வெற்றிலை கொடி என்பது கருவெற்றிலை கொடி. இதை பௌர்ணமி அன்றுதான் வாங்க வேண்டும். பௌர்ணமி அன்று வாங்கி வந்து நம்முடைய வீட்டின் ஈசானிய மூலை என்று கூறக்கூடிய வடகிழக்கு மூலையில் இந்த செடியை வைக்க வேண்டும். வீட்டில் இடவசதி இருந்தால் தரையிலையே வைத்து வளர்க்கலாம் ஒரு வேளை இடவசதி இல்லை என்பவர்கள் தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம்.
இந்த செடியை நாம் நடுவதற்கு முன்பாக 5 நாணயங்களை பள்ளத்திற்குள் போட்டு அதற்கு மேல் இந்த செடியை வைத்து மண்ணால் மூட வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி மஞ்சள் குங்குமம் போட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி தொட்டு வணங்க வேண்டும். இந்த செடி எந்த அளவிற்கு செழிப்பாக வளர்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் செல்வமும் வளர ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று இந்த வெற்றிலை கொடிக்கு மஞ்சள் குங்குமம் போட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய மகாலட்சுமியின் அருளால் நம்முடைய வறுமை நிலை படிப்படியாக விலகும்.
https://chat.whatsapp.com/KMDNStn1PenBi7ENYRF7OK
மகாலட்சுமியின் அம்சம் கொண்டதாக தான் இந்த வெற்றிலை திகழ்கிறது என்பதால் எப்படி துளசி செடிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல் வெற்றிலை கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்க வறுமை அற்ற செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழலாம்
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 🙏
https://primetrace.com/group/2243661/post/1155312547?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ