⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 2, 2025 at 01:16 AM
படைப்பாற்றலை பெருக்குவாள் பிராம்ஹி! சரஸ்வதியின் அம்சமாக ப்ராம்ஹி எனும் திருப்பெயரில் அருள்புரியும் அம்பிகையைப் பற்றி அறிந்து கொள்வோம். பிராம்ஹி பிரம்ம தேவனின் முதல் எழுத்தாகிய ‘ப்ராம்’ என்பதே இவளின் பீஜாட்சரமாகத் துலங்குகிறது. மது, கைடப வதத்திற்குப் பின் பிரம்ம தேவனுக்கு உலகை உருவாக்கும்படி பராசக்தி கட்டளையிட, பிரம்மா தன் பணியைத் திறம்பட புரிய துணையாக அவருக்கு அவளருளால் தரப்பட்ட சரஸ்வதி தேவியே ப்ராம்ஹி எனப் போற்றப்படுகிறாள். ஓர் சமயம் நான்முகன் தம் நாயகியரான காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி போன்ற தம் சக்திகளுடன் காசிக்கு வந்தார். அங்கு ‘பிதாமகேஸ்வரம்’ எனும் லிங்கத்தை நிறுவி வழிபட்டார். உலக நலனுக்காக பத்து அஸ்வமேதயாகங்களை அங்கே செய்து முடித்தார் படைப்புக் கடவுள். யாகங்கள் முடிந்ததும் ‘அவப்ருத எனும் ஸ்நானம் செய்ய வேண்டி கங்கையை நோக்கி காயத்ரி, சாவித்ரி போன்ற இரு தேவியருடன் சென்றார் பிரம்மா. யாக சாலையில் கந்தர்வர்களின் இனிய இசையில் சங்கீதத்திற்கு தேவதையான சரஸ்வதியே ஆழ்ந்திருந்தாள். ஆகையால், பிரம்மன் நீராடச் சென்றதை அவள் அறியவில்லை. சரஸ்வதிக்காக கங்கையின் கரையில் காத்திருந்த நான்முகன் நேரம் கடந்துவிட்டதால் மற்ற இருவருடன் அவப்ருத ஸ்நானம் செய்து முடித்தார். காலம் கடந்து கங்கையை அடைந்த கலைவாணி ‘‘தாங்கள் என்னை விட்டு எப்படி நீராடலாம்?’’ என வெகுண்டாள். அதனால் கோபம் கொண்ட பிரம்மா, ‘‘தேவி! நீ சரியான நேரத்தில் வராதது மட்டுமன்றி என்னிடமும் கோபம் கொண்டாய். எனவே, நீ பூமியில் நாற்பத்தெட்டு முறை பிறவி எடுத்து பின் எம்மை அடைவாய்,’’ என சாபமிட்டார். அதற்கு சரஸ்வதி, ‘‘நான்முகனே! நாற்பத்தெட்டு முறை நான் பூமியில் பிறவாமல் என்னைத் தடுத்தாட் கொள்ள வேண்டும்,’’ என வரம் கேட்டாள். ‘‘பூவுலகில் உனது உருவாய்த் திகழும் 48 அட்சரங்களும் 48 தமிழ்ப் புலவர்களாய்ப் பிறந்து ஒரே சமயத்தில் வாழ்வர். அவர்களுக்கு ‘ஹ’காரத்தின் உருவமாய் பரமனே அந்தத் தமிழ்ப் புலவர்களுக்குத் தலைவனாய் இருந்து அவர்களைப் போற்றுவார்,’’ எனக் கூறினார் பிரம்மன். இந்த சரஸ்வதி தேவியின் அம்சமான 48 மாத்ருகா அட்சரங்களே 48 சங்கப் புலவர்களாகத் திகழ்ந்தனர்.  பாரினில் தமிழ் மணம் பரப்பியதை திருவிளையாடற் புராணம் பேசுகிறது. இத்தேவி சொல்லின் உருவமானவள். வாக்தேவதை, வர்ணமாத்ருகா, வாக்வாதினி, சரஸ்வதி என மந்திர சாஸ்திரங்களால் வர்ணிக்கப்படுபவள். அ முதல் ஃ வரையிலுள்ள உயிர் எழுத்துகளை முகமாகவும், கண், காது, மூக்கு போன்றனவாகவும் விளங்குகின்றன. க வர்க்க எழுத்துருக்கள், ச வர்க்க எழுத்துருக்கள்  தேவியின் கரங்களாகவும், ட வர்க்கமும்  மற்றும் த- வர்க்கமும் ஆகிய பத்து எழுத்துகள் தோள்களாகவும் ப-வர்க்கம் வயிறாகவும், ய-விலிருந்து ஹ வரை எட்டு எழுத்துகளும் தோல், இரத்தம், சதை, எலும்பு, மஞ்ஜை, சுக்லம் போன்ற தாதுகளாகவும் இவளின்  தேகத்தில் அமைந்துள்ளன. சங்கீதமும் சாகித்யமும் இரு மார்பகங்களாக திகழ்கின்றன. தன் ஆறு கரங்களிலும் வரதம், அக்கமாலை, தண்டம், கமண்டலம், சருவம், அபயம் போன்றவற்றைத் தரித்தவள். மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் கலந்த நிறத்தை உடையவள். மான் தோலை ஆடையாகத் தரித்தவள். இவள் வாலை எனும் குழந்தை வடிவமும் கொண்டவள் என துர்க்கா பூஜா கல்பம் எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது. இத்தேவி அதிகாலையில் துதிக்கப்படும் சந்தியா தேவதையாகவும், பிரம்ம சக்தி எனும் கிராம தேவதையாகவும் வேள்விகளைக் காக்கும் யாக தேவதையாகவும், அஷ்ட பைரவர்களில் முதல்வனான அஸிதாங்க பைரவரின் தேவியாகவும் பல நிலைகளில் இருந்து பக்தர்களுக்கு திருவருட்பாலிக்கிறாள். இவளே சகலகலாவல்லி. சகல கல்வி கேள்விகளில் சிறந்தவராக இவள் கடைக்கண் பார்வை கட்டாயம் தேவை. இந்த அன்னையை தியானித்து வழிபட்டால் கற்ற கலைகள் மறந்து போகாமல் மனதினில் நிலைத்திருக்கும். போர்க்கோலம் கொள்ளும்போது ஆயுதங்களோடும், ஞானத்தை அளிக்கும்போது வாக்தேவியாக, வீணை புத்தகம் ஏந்தியவளாக , சரஸ்வதியாக அருள்பவளும் இவளே. தோலிற்குத் தலைவியான இவள் கோபம் கொண்டால் சொறி நோய் ஏற்படும். வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை சாந்தமடைந்து நம்மை ஆசீர்வதிப்பாள். தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித் தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும். ப்ராஹ்மி காயத்ரி ஓம் ஹம்ஸத்வஜாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி தன்னோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்: அன்னத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை உடையவளும், தர்ப்பைப் புற்களால் ஆன கூர்ச்சத்தை ஏந்திய கரங்கள் கொண்டவளுமான ப்ராஹ்மி எனும் தேவியை தியானம் செய்கிறேன். அவள் என் முன்வந்து என் அறிவை மேம்படுத்தி பிரகாசிக்கச் செய்வாளாக. சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1155526040?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
Image from ⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡: படைப்பாற்றலை பெருக்குவாள் பிராம்ஹி!  சரஸ்வதியின் அம்சமாக ப்ராம்ஹி எனும...

Comments