⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 6, 2025 at 09:15 AM
உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள் -1 உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும். அவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கி தூய்மையான உடலுடன் யோக சாதனையினை செய்யும் பொருட்டு சில செய்முறைப் பயிற்சிகளை பார்ப்போம் . இவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கும் முறைக்கு நித்திய சுத்தி என்று பெயர். இதை 5 விதமாகப் பிரிக்கலாம். அவை 1. தந்த சுத்தி 2. கப சுத்தி 3. நேத்திர சுத்தி 4. குடல் சுத்தி 5. உடல் சுத்தி என்பனவாகும். உடலின் கழிவுகள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெளியேற்றப்படாத கழிவுகள் தங்கும் இடங்களாக வாய், தொண்டையின் மேல்பகுதி, கண், குடல் போன்ற இடங்கள் உள்ளன. இங்கு தங்கும் கழிவுகளே மனித உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து பல நோய்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன. எனவே இந்தக் கழிவுகளை முறைப்படி நீக்குவது மிகவும் அவசியமாகும். காயம் என்னும் உடலைப் பற்பல அபூர்வ மூலிகைகளாலும், பாஷாண மருந்துகளாலும், மிகவும் உயர்வான பல கற்ப ஒளஷதங்களாலும் அழியாத தூய உடலாக மாற்றும் இந்த நித்திய சுத்தி முறைகள் மிகவும் அவசியமாகும். இவ்வாறு பல ஆண்டுகள் மிகவும் கடுமையான பல கட்டுப்பாடுகளுடன் நித்திய சுத்தி முறைகளையும், ஒளஷத முறைகளையும் கடைப்பிடித்து உடலை சித்தி செய்து கொண்ட பின் இந்த முறைகள் தேவையில்லை. எனவே அந்நிலையை அடைந்த சித்தபுருஷர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு இவர்களெல்லாம் தினமும் இந்த முறைகளை கடைப்பிடிப்பதில்லையே என்ற குழப்பம் உன் மனதில் எழக்கூடாது. ஏனெனில் அவர்கள் முழுவதும் தூய்மை அடைந்தவர்கள். எனவே அந்நிலையினை அடையும் வரையில் கண்டிப்பாக இந்த நித்திய சுத்தி முறைகளை கடைப்பிடித்தே ஆக வேண்டும். இனி நித்திய சுத்தி முறைகளை கடைப்பிடிக்கும் போது கையாள வேண்டிய பொருள்களைப் பற்றித் தெளிவாகக் காண்போம் . முதலில் தந்த சுத்தி என்னும் பல்லினைத் தூய்மை செய்யும் முறையையும் அதற்குரிய பொருள்களையும் பார்ப்போம் . இந்த முறையினை யோகிகள் அல்லாதவர்களும் கடைப்பிடிப்பதால் நலமே கிட்டும்.ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவு விதிகள் நாம் உண்ணும் உணவும் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு அல்லது பின்னடவிற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது; சமையல் செய்யும் போது கோபம்,வெறுப்பு,குரோதம்,மனவருத்தம் அடைந்தால் அந்த எண்ணங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் (கணவன்,குழந்தைகள்) உறுதியாகப் பிரதிபலிக்கும். தினமும் கவனித்துப் பார்த்தால் உண்ணும் உணவே சமைத்தவரின் எண்ண ஓட்டங்களைத் தெரிவித்துவிடும். ஒவ்வொரு முறை உண்ணும் போதும் (காலை,மதியம்,இரவு) அந்த உணவில் அறுசுவையும் இருப்பது முழு ஆரோக்கியத்தைத் தரும்; ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன்பு பழங்களைச் சாப்பிட்டுப் பழகுவது நன்று. உண்டபின்னர் பழங்கள் சாப்பிடுவது தவறு குக்கரில் சமைக்கும் சாதத்தைத் தவிர்ப்பது அவசியம். சாதத்தை வடித்து,அந்த வடிநீரை அருந்துவது நமது உடலுக்கு அளவற்ற நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். மட்டை அரிசி, பாலீஷ் செய்யாத அரிசியை வீட்டுச் சமையலுக்கு வாங்கிப் பழகுங்கள். சாதாரண பாத்திரத்தில் சமைக்கப் பழகுவது அவசியம். திறந்த பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறப்பு. திறந்த நிலையில் பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் அந்த உணவின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. இந்த சக்திகள் நமது கண்களுக்குப் புலப்படாது; மிக்ஸியில் அரைக்கப்படும் சட்னியானது விரைவில் கெட்டுப்போய்விடுகிறது. சுவையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. ஆனால், ஆட்டு உரலில் அல்லது அம்மிக்கல்லில் அரைத்த சட்னியின் சுவை அற்புதமாகவும் நமது உடல் நலத்தை தொடர்ந்து பராமரிக்கும் விதமாகவும் இருக்கும். அம்மிக்கல்லில் திறந்தவெளியில் அரைக்கும் போது பிரபஞ்சத்தின் அத்தனை கதிர்களும் நமது கண்ணுக்குத் தெரியாமல் இத்துடன் கலந்துவிடுகின்றன. அனைத்துப் பருப்புகளையும் தோல் நீக்காமல் உண்ணப் பழகவேண்டும். புளிக்குப் பதிலாக எலுமிச்சையை பயன்படுத்தப் பழக வேண்டும். மிளகாய்க்குப் பதிலாக மிளகை உபயோகிக்கப் பழக வேண்டும். வெள்ளைச் சீனி நமது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பை மெதுவாகக் கொல்லும் விஷம். அதற்குப் பதிலாக கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு,வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவைகளை பயன்படுத்தப் பழக வேண்டும். வேக வைத்த உணவுகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்; பொரித்த உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நோயை இலவசமாக வாங்குவதாக அர்த்தம். கொழுப்பு தரும் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது அவசியம். ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு முறையும் சாப்பிடத் துவங்கும் முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட வேண்டும். இந்த பிரார்த்தனை நேரம் வீடு எனில் ஒரு நிமிடம் வரையிலும், வெளியிடங்கள் எனில் சில நொடிகள் வரை இருக்கலாம்; தினமும் புதிய காய்கறிகளையும்,கீரைகளையும் சாப்பிடப்பழக வேண்டும். சாப்பிடும் போது ஒருபோதும் புத்தகம் படிக்கக் கூடாது. சாப்பிடும் போது ஒரு போதும் டிவி பார்க்கக் கூடாது. சாப்பிடும் போது ஒருபோதும் போனிலோ,நேரிலோ பேசவே கூடாது. சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்கள் முன்பும்,பின்பும் தண்ணீர் அருந்தக் கூடாது; பசி இல்லாத போது ஒருபோதும் சாப்பிடக்கூடாது. அதேசமயம், பசி உணர்வு வந்த கொஞ்ச நேரத்திலேயே சாப்பிடப் போய்விட வேண்டும். அதிகநேரம் பசி உணர்வுடன் இருக்கக்கூடாது. பசிக்கும் போது ஒரு போதும் காபி, டீ, பால், வடை, குளிர்பானங்கள் சாப்பிடவே கூடாது. நாம் உண்ணும் உணவில் கசப்பு சேர்ப்பதை ஒதுக்கிவிட்டோம். அதனால் தான் உடலானது நோய்வாய்ப்படுகிறது; சைவ உணவில் தானிய உணவு, பருப்பு வகை உணவு, காய்கறிகள் மற்றும் கிழங்குகள், கீரை வகைகள் என்று நான்கு வகைகள் இருக்கின்றன. இவைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது ஆரோக்கியமும் ஆன்மீக முன்னேற்றமும் உறுதிப்படும்; புடலங்காய், தேங்காய், பிஞ்சாக இருக்கும் வெண்டைக்காய், முருங்கைக்காய், பீட்ரூட், காரட் கிழங்கு, சேமைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, முள்ளங்கி, வெள்ளைப்பூண்டு, தூதுவளை, தண்டுக்கீரை, சிறுகீரை, கறிவேப்பிலை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, திராட்சைப் பழம், மாதுளம்பழம், காசினிக்கீரை, ரோஜாப்பூ, பிஸ்தாப் பருப்பு, சாதிக்காய், கோரைக்கிழங்கு, இலவங்கப்பட்டை, கிச்சிலிக்கிழங்கு, ஏலக்காய், அகிற்கட்டை, வெள்ளாட்டுப்பால், வாதுமைப்பருப்பு, சுரைவிதை, நெல்லிக்காய், நாரத்தம்பழம், இஞ்சி, சந்தனம், கஸ்தூரி, புதினா இலை, மிளகு, நாவல்பழம், குங்குமப்பூ மற்றும் சில உணவுப்பொருட்களே காலம் காலமாக நம்மையும், நமது முன்னோர்களையும் ஆரோக்கியமாக வாழ வைத்து வருகின்றன; டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகளை தவிர்க்கவும். இயந்திரங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கவும். மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் இருக்கும் சுவையும் அக்கறையும் இயந்திரச் சமையலில் இராது. அந்தந்தப் பருவகாலங்களில் விளைகின்ற பழங்கள், காய்கறிகள், கீரைகளை உண்ணவும். கோடையின் வெப்பத்தைத் தணிக்க டிவி விளம்பரங்களில் வரும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம். மோர், தர்ப்பூசணி, இளநீர், செவ்விளநீர், குல்கந்து(ரோஜாத் தேனூறல்), திராட்சைப்பழம், திராட்சைப் பழச் சாறு, காரட்,காரட் சாறு போன்றவைகளே நமது உடலுக்கு குளிர்ச்சியைத் தருபவை. ஆட்டுக்கறி, மாட்டுக்கறி போன்றவைகள் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவும். இவைகளை கடையில் வாங்கிச் சாப்பிடுவதையும் கைவிடவும். ஏனெனில், இவைகளில் சேர்க்கப்படும் செயற்கைச் சுவையூட்டிகள் நமது உடலுக்குள் செல்லும் போது நோய்களை உருவாக்கக் காரணியாக அமைந்துவிடுகிறது; உப்பு, சர்க்கரை, காரம் கலந்த உணவுகளை அளவோடு சாப்பிடப் பழகவும். சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1155970405?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
Image from ⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡: உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள்  -1  உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவ...

Comments