Coimbatore Weatherman
May 18, 2025 at 04:35 AM
கோயம்புத்தூர் வெதர்மேன் டு கொங்கு சொந்தங்கள் ஒரு காமெடி கலந்த மழை முன்னறிவிப்பு: மழைக்கான வாய்ப்புகள் இன்றும் நாளையும் நன்றாக உள்ளன. அதனால் நான் உங்களோடு கேட்டுக்கொள்வது "கப்ப விட்றாத பிகிலே" . மழைக்குத் தேவை உள்ள பொருட்கள்: பாலக்காடு கணவாய் காற்று கம்மியாக இருந்து மேகங்கள் வடகிழக்கில் இருந்து தென்மேற்கு செல்ல வேண்டும். வங்கக்கடலில் உள்ள காற்று மேலடுக்கு சுழற்சி சற்று மேகே நகர வேண்டும். மழைக்கு தேவையில்லாத பொருட்கள் : நேத்து வட தமிழகத்திலிருந்து கனமழை பெய்து நம்ம மழையை கெடுக்கும் ஹை கிளவுட்ஸ் முடிந்தால் ஓரங்கட்டி கேரளாவுக்கு தள்ளிவிடவும். பாலக்காடு கணவாய் தென்மேற்கு காற்றை முடிந்தால் தடுத்து நிறுத்தி விடுங்கள். அது மேகங்களை கிழித்து எரியும் தன்மை உடையது. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
👍 😂 🙏 ❤️ 😁 🔥 😛 😢 😮 🤔 60

Comments