Coimbatore Weatherman
                                
                            
                            
                    
                                
                                
                                May 24, 2025 at 04:10 AM
                               
                            
                        
                            கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தென்மேற்கு பருவமழை முக்கிய அறிவிப்பு May24, 2025:
நாம் எதிர்பார்த்தது போல் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பாலக்காடு கணவாய் பகுதிகளுக்கு கனமழை தொடங்கியது. இன்றிலிருந்து may 31 ஆம் தேதி வரை கேரளா, சிறுவாணி மலைப்பகுதி நீலகிரி வால்பாறை மற்றும் அனைத்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு மிக மற்றும் அதீத கன மழை பெய்யக்கூடும்.
அனைத்து அணைகளுக்கும் நல்ல நீர்வரத்து இருக்கும். நமது நொய்யல், பவானி, அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். ஆற்றங்கரை ஓரம் இருக்கும் மக்கள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
கோயம்புத்தூர் சிட்டிக்கு ரெட் அலர்ட் தேவை இல்லை. வால்பாறை நீலகிரி ஆகிய மலைப்பகுதிகளுக்கு கண்டிப்பாக ரெட் அலர்ட் தேவை.
கோயம்புத்தூர் சிட்டிக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டிருக்கும். #kulukulukovai எதிர்பார்க்கலாம். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு லேசான மழை இருக்கும் ஒரு சில இடங்களில் மிதமான மழை 
இருக்கும்.
மேற்கு பாலக்காடு கணவாய் மற்றும் மேற்கு கோவை பகுதிகளுக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை இருக்க வாய்ப்புள்ளது.
நமது வானிலை முன்னறிவிப்பு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நம்புகிறேன்.
©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
Follow our watsapp channel for instant updates 
https://whatsapp.com/channel/0029Va8CxiC9MF8zw2ScBp3z
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            ❤
                                        
                                    
                                        
                                            👌
                                        
                                    
                                        
                                            🤝
                                        
                                    
                                        
                                            🥶
                                        
                                    
                                        
                                            🪄
                                        
                                    
                                    
                                        129