
Jothimani MP
June 6, 2025 at 12:01 PM
இன்று (06.06.2025) மணப்பாறை சட்டமன்றத் தொகுதி, மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கருப்பூர் ஊராட்சி, மானாங்குன்றம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன் அவர்கள் தலைமையில், எனது மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் சமது அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.