
கதம்பம்
June 9, 2025 at 01:44 AM
*தினம் ஒரு தகவல்*
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
ஜப்பானிய வாழும் கலை *Ikigai கூறும் 10 விதிகள்*
1) *சுறுசுறுப்பாக இருங்கள்:*
எப்போதும் எல்லா வயதிலும் ஏதாவது செய்து கொண்டே இருங்கள் சும்மா இருந்து விடாதீர்கள்.
2) *மெதுவாக*
*செய்யுங்கள்*
எல்லாவற்றையும் அவசரமாக பதட்டமாக செய்வதை விட நிதானமாக செய்யுங்கள். பொறுமையைக் கடைபிடியுங்கள்.
3) *வயிற்றை நிரப்பாதீர்கள்:*
அளவுக்கும் தேவைக்கும் அதிகமாக சாப்பிடக்கூடாது. 80% வயிறு நிரம்பி இருந்தால் போதுமானது.
4) *நல்ல* *நண்பர்களோடு*
*இருங்கள்* :
நம்பிக்கை ஆறுதல் ஆலோசனை உதவி மகிழ்ச்சி என அனைத்தும் தரக்கூடிய நல்ல நண்பர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.
5) *உங்கள் அடுத்த பிறந்த நாளுக்குள் நல்ல உடல் தகுதியை பெறுங்கள்.:*
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எடையை கட்டுப்படுத்துவது உடலை பராமரிப்பது மிகவும் அவசியம்.
6) *புன்னகையுங்கள்* :
எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு செய்யுங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். சக மனிதர்களை பார்த்து புன்னகையுங்கள்.
8) *இயற்கையோடு இணைந்து வாழுங்கள்:*
இயற்கையை ரசிப்பது நேசிப்பது இயற்கையோடு இணைந்து சில சமயங்களில் ஆவது வாழ்வது, அத்தகைய இடங்களுக்கு நேரில் செல்வது அவசியம்.
9) *நன்றி செலுத்துங்கள்*:
வாழ்க்கையில் எப்போதும் நன்றி உணர்வோடு இருங்கள். உடலோடு இருந்தால் மட்டுமல்ல நன்றியை வார்த்தைகளாலும் செயல்களாலும் வெளிப்படுத்த வேண்டும்.
9) *நிகழ்காலத்தில்* *வாழுங்கள்* :
கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படாமல் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படாமல் இப்போது இந்த தருணம் இந்த நிமிடம் என்னுடைய வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்ற மனநிலையில் இருந்தால் தான் வாழ்க்கை ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ முடியும்.
10) *உங்கள் இகிகையை கண்டுபிடிங்கள்*:
உங்களுக்கு என்று ஒரு ஆர்வம் தேடல் நோக்கம் கனவு விருப்பம் என்று ஏதாவது இருக்கும். அது என்னவென்று கண்டுபிடித்து அதில் உங்கள் கவனத்தை செலுத்தி உங்கள் வாழ்வை மேம்படுத்துங்கள்.
~ *நம்ம கதம்பம் சேனல்*

❤️
👍
🤍
7