Let's talk with றாம்
Let's talk with றாம்
May 27, 2025 at 05:16 AM
வேறென்ன வேண்டும்? உண்மையில் எனக்கே என் மீது நம்பிக்கைப் பிறக்கிறது. மிக்க அன்பும் நன்றியும் குலா 🥹 புரவியில் பேசிய எனது உரை குறித்து எழுத்தாளர் மு. குலசேகரன் அவர்களின் பின்னூட்டம்: // M Kulasekaran நாவலை இரண்டு மூன்று நாட்களில் படித்து முடித்து, முடித்தவுடன் அதைப் பற்றி நம்பிக்கையுடன் உரையாற்றுவது எப்போதும் அற்புதமானது. உங்களின், இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலுமான, படைப்புத்திறன், வாசிப்புத் திறன், வெளிப்பாட்டுத் திறன் போன்றவற்றைக் காட்டுவது. நாவலை வெறும் கதையாகக் காணாமல் அதிலுள்ள நுட்பங்களை கண்டெழுதுவது முக்கியமானது. அதுவே இலக்கியத்தன்மை. அதுவே எழுதுபவன் உத்தேசிப்பதும். யதார்த்தத்தின் எல்லைக்குள் நின்று தர்க்கங்களையும் வட்டார வழக்குகளையும் இல்லாதவற்றையும் தேடாமல் பேசினீர்கள். புனைவு ரீதியான எதிர்ப்புகள் தோன்றுவதையும் குறிப்பிட்டீர்கள். ஒரு விவசாயத்தை அடிப்படைத் தளமாகக் கொண்ட நாவலில் அதை ஏறக்குறைய முழுதாக நீக்கி பிற அம்சங்களை, பாடுகளை பேசியது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தது. பொதுவாகவே நாவல், அந்த ஒன்றல்ல, பல அம்சங்களுடையது. அதை நினைவிலிருந்து சரளமாக முன்வைத்தது சிறப்பு. இன்னும் அவகாசமிருந்தால் மேலும் சிறப்பாயிருந்திருக்கும். ஆனால், உடனடித் தன்மை உள்ளத்திலிருந்து தடையற்று வருவது. ஆனால், அதற்கு இலக்கிய ஈடுபாடு, முன், பின் பயிற்சி வேண்டும். அவை உங்களிடம் நிறைவவே இருக்கின்றன.//

Comments