
Kalaignarist - கலைஞரிஸ்ட்
May 17, 2025 at 03:33 AM
கேள்வி: "ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம் என்று கலைஞர் சொன்னாரா?"
பதில்: திராவிட இயக்கத் தோழர்களே அடிக்கடி பதற்றத்தோடு கேட்கும் கேள்விகளுள் ஒன்று இது.
05.02.2000 அன்று அரசு அலுவலர்கள் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸில் இணைந்து இயங்குவதை குஜராத் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதிப்பதை நேரடியாக ஆதரித்து பிரதமர் வாஜ்பாய், "ஆர்.எஸ்.எஸ் ஒரு அரசியல் இயக்கமல்ல. பண்பாட்டு இயக்கம்" என்று பேசிய சூழலில் அதை எதிர்த்து தலைவர் கலைஞர் தந்த பதிலடி இது.
நமக்கு எப்படி திராவிடர் கழகமோ, பா.ஜ.கவுக்கு ஆர்.எஸ்.எஸ் அப்படி என்ற பொருளில் பேசிவிட்டு, அதற்கு அடுத்த வரியில் தெளிவாக ஒன்றைச் சொன்னார்.
"ஒரு வாதத்திற்கு #வாஜ்பாய் சொன்னபடி ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம்தான் என்று வைத்துக்கொண்டாலும், அது நேரடியாக அரசியலில் ஈடுபடும் சமூக இயக்கம். அதனால் அரசு பணியாளர்கள் அந்த இயக்கத்தில் சேருவதை என்னால் ஏற்கமுடியாது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்தக் கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்" என்றார் முதல்வர் கலைஞர்.
("....even if it is accepted that the RSS is not a political organisation, just as some social organisations are taking part in politics the RSS is also taking part in politics. I have made it clear that I cannot accept the view that government employees can join the RSS. I still hold this view")
பெரியார், அண்ணா காலத்திற்கு பிறகு திராவிட இயக்கத்தின் authority என்றால் அது தலைவர் கலைஞர்தான். அவரை மிஞ்சிய கொள்கைவாதி இங்கே எவனும் இல்லை. இதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொண்டால், எதிரிகள் அவரைப் பற்றி அள்ளி வீசும் எத்தகைய திரிபுவாத அவதூறுகளையும் இப்படி பதற்றமின்றி எதிர்கொள்ளலாம். 🖤❤️
- Ganesh Babu
#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋
#கருணாநிதி 🕶💺
#கலைஞரிஸ்ட் - #kalaignarist
❤️
🙏
5