கதம்பம்
கதம்பம்
June 12, 2025 at 12:57 AM
*வரலாற்றில் இன்று* *12 ஜூன் 2025-வியாழன்* *============================* 1381 : உழவர் கிளர்ச்சி :- இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் லண்டன் வந்து சேர்ந்தனர். 1429 : நூறாண்டுப் போர் :- ஜோன் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு ராணுவம் ஆங்கிலேயர்களிடமிருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். 1550 : பின்லாந்தில் ஹெல்சிங்கி நகரம் முதலாம் குஸ்டாவ் என்பவரால் அமைக்கப்பட்டது. 1772 : நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க் - ஜோசப் மரியண்ட் பிரெஸ்னேயும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகள் எனப்படும் பழங்குடிகளால் கொல்லப்பட்டனர். 1817 : ஆரம்பகால மிதி வண்டி, டான்டி குதிரை கார்ல் வான் டிராய்ஸ் என்பவரால் இயக்கப்பட்டது. 1830 : 34 ஆயிரம் பிரெஞ்சுப் படையினர் அல்ஜீரியாவை அடைந்ததிலிருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது. 1898 : பிலிப்பைன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக எமிலியோ அகுயினாடோ அறிவித்தார். 1899 : அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர். 1902 : ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. 1914 : ஒட்டோமான் பேரரசில் துருக்கியர்கள் 100 கிரேக்கர்கள் வரை படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர். 1934 : பல்கேரியாவில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன. 1935 : பொலிவியாவுக்கும், பராகுவேவுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது. 1940 : இரண்டாம் உலகப்போர் :- 13,000 பிரிட்டன், பிரெஞ்சுப் படையினர் பிரான்ஸில் நாஜி ஜெர்மனியின் ராணுவத் தளபதி இர்வின் ரோமெல்லிடம் சரணடைந்தனர். 1943 : ஜெர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர். 1944 : இரண்டாம் உலகப்போர் :- அமெரிக்க பாரசூட் வீரர்கள் பிரான்ஸின் கரேண்டன் நகரைக் கைப்பற்றினர். 1964 : ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாப்ரிக்க நீதிமன்றம் ஆயுள் கால சிறைத்தண்டனை விதித்தது. 1967 : கலப்பினத் திருமணங்களைத் தடை செய்யும் அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சோவியத் ஒன்றியம் வெனேரா - 4 விண்கலத்தை வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது. 1987 : மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன் - பெடெல் போகாஸாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1990 : ரஷ்யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்திலிருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது. 1991 : ரஷ்யாவில் முதல் தடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி போரிஸ் எல்ட்சின் பதவியேற்றார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். 1992 : இந்தியாவின் முதல் மருத்துவ மாத இதழ் மெடி நியூஸ் வெளியானது. 1993 : நைஜீரியாவில் தேர்தல் நடைபெற்றது. ஆனால் இது பின்னர் ராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது. 1999 : நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப்படை கொசோவோவினுள் நுழைந்தது. 2003 : தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்கு தமிழக அரசு தடை விதித்தது. 2006 : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர். 2016 : அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர்.

Comments