
கதம்பம்
June 12, 2025 at 02:37 AM
*தினம் ஒரு தகவல்*
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோர் சான்று
( *Economically Weaker Section- EWS Certificate )*
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைகளில் 10% இடஒதுக்கீட்டை EWS சான்றிதழ் வழங்குகிறது.
தகுதி என்பது ரூ.8 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் மற்றும் குறிப்பிட்ட சொத்து வரம்புகளை உள்ளடக்கியது.
OC பட்டியலில் அடங்கிய இதர வகுப்பினர் மட்டுமே இந்த சான்று பெற இயலும்.
நீங்கள் SC/ST/OBC (மத்திய பட்டியல்) அல்லது தமிழ்நாட்டில் MBC, BC, DNC, DNT, SC, ST போன்ற எந்த வகையிலும் சேராதவராக இருக்க வேண்டும்.
தற்போதைய நடைமுறையில் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மட்டுமே EWS இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
எனினும் மாநில அரசின் இ சேவை மூலம் இந்த சான்றிதழை இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
*யாரெல்லாம் பெற தகுதியற்றவர்கள்*
ஐந்து ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளவர்கள்
ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பில் சொந்தமாக வீடு உள்ளவர்கள்
அறிவிக்கப்பட்ட நகராட்சிகளில் 100 சதுர கெஜத்துக்கு மேல் சொந்தமாக இடம் வைத்திருப்பவர்கள் அதற்கு கீழ் உள்ள பகுதிகளில் 200 சதுர கஜத்திற்கு (Square Yard) மேல் மனை இடம் வைத்திருப்பவர்கள்.
இவர்கள் மேற்குறிப்பிட்ட சான்று பெற தகுதியானவர்கள் இல்லை.
எனினும் 8 லட்சத்திற்கு வருமானம் உள்ளவர்கள் ஏழைகளா என்றும்
10% இட ஒதுக்கீடு விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மிகவும் அதிகம் என்றும்,
சொத்துக்களை மறைத்து முறைகேடாக எளிதில் EWS சான்றிதழ் பெற்று சலுகைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும்,
கருத்துக்கள் நிலவுகிறது.
📇📇📇📇📇📇📇📇📇
~ *நம்ம கதம்பம் சேனல்*

❤️
👍
2