
கதம்பம்
June 12, 2025 at 11:16 AM
.இப்படித்தான் பெரும்பாலான ஆண்கள் நிலை..
இது எத்தனை மனைவிகளுக்கு தெரியும் அல்லது உணர்வார்கள்?
வருஷம் முழுவதும் இரண்டே இரண்டு செட் உள்ளாடைகளோடயே காலம் கழிக்கின்றான்.
ஜட்டி பனியனில் எலி, பூனை போகிற அளவுக்கு பெரிய ஓட்டை இருந்தாலும் மாற்ற நினைக்கமாட்டான். ஆனால் மனைவி குழந்தைகளுக்கு கணக்கு பார்க்காமல் வருஷம் ரெண்டு தடவை மட்டும் கட்டுற பட்டுசேலை பத்தாயிரத்துக்கு வாங்கி கொடுக்கிறான்.
ஒரு நல்ல செருப்பு வாங்கமாட்டான். ஆனால் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் மனைவி குழந்தைகளுக்கு புது புது டிசைனில் கொலுசு, செருப்பு வாங்கி கொடுப்பான்.
வாரம் அஞ்சு நாளும் வெளியே வேலை பார்த்து விட்டு வார கடைசி விடுமுறையில் வீட்டுக்கு வந்து கறிக்கஞ்சி சாப்பிட்டுட்டு தூங்கி திங்கட்கிழமை காலையிலே
பிள்ளைகள் கிட்ட கூட சொல்லிக்காம வேலைக்கு ஓடும் ஜென்மம் அவன்.
ரெண்டாயிரம், மூவாயிரத்துக்கு சின்ன குஞ்சுகளுக்கு டிரஸ் எடுத்துட்டு
மூணு பேண்ட் 1000 ரூபாய்க்கும் ,150 ரூபாய் பனியன் மூணும் எடுத்து சந்தோசப்படுவான்.
காலேஜ் போற பொண்ணுக்கு ஸ்கூட்டர் 1 லட்சம், பையனுக்கு 2 லட்சம் பைக் வாங்கி கொடுத்து பெட்ரோலுக்கும் காசு கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு மாத பாஸ் வாங்குறதுக்கு கார்ப்பரேஷன் டிப்போல நிற்பான்.
35 000 ரூபாய்க்கு பிள்ளைங்களுக்கும், சமையல் நிகழ்ச்சி பார்க்க மனைவிக்கு
15 000 ரூபாய்க்கு போன் வாங்கி குடுத்து விட்டு 1000 ரூபாய் பட்டன் செல் தேஞ்சு போனதை உற்று பார்த்து நம்பர் அமுக்கிக் கொண்டு நிற்பான்.
கடையிலே போயி கட்டிங் ஷேவிங் பண்ணினா மாசம் 400 ரூபாய் போகும்னு சின்ன கத்திரிக்கோலும் 35 ரூபாய் டையும் வாங்கி வீட்டிலே வச்சே டை அடிப்பான்.
அஞ்சு ரூபாய் டீக்கடையா தேடி பார்த்து டீ குடிப்பான். ரெண்டு ரூபாய் சில்லரைக்கும் சண்டை போடுவான்.
இதெல்லாம் என்ன ஜென்மமோ ?
இதில் நிறையவே உண்மை உள்ளது.
ஆண்களிலும் பலர் இப்படித்தான்...
உணர்வார்களா மனைவிகள்?
👍
❤️
🥰
5