
Aanthai Reporter News Channel
June 12, 2025 at 05:01 AM
🦉தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து 92 ஆவது ஆண்டாக இன்று பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக மேட்டூர் அணைக்கு வருகை தந்து பாசனத்திற்கு நீர் திறந்து வைத்துள்ளார். எட்டு கண் மதகு வழியாக முதற்கட்டமாக மூவாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக இன்று இரவுக்குள் நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.
