Barakath Ali - journalist
Barakath Ali - journalist
June 12, 2025 at 05:46 PM
*எலக்‌ஷன் என்சைக்ளோபீடியா!* 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை பட்டியல் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது. இதே போல ஒரு பட்டியல் பத்தாண்டுகளுக்கு முன்பு 2016 சட்டமன்றத் தேர்தலில் வெளியானது. அதனை வெளியிட்டவர் இன்றைக்கு ராஜ்யசபா எம்.பி ஆக முடியாத சுதீஷ். 2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, தமாக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை தனி அணியாக போட்டியிட்டது. அப்போது கோவில்பட்டி பிரசாரத்தில் வைகோ , ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய சுதீஷ், ’’தேமு‌திக-மக்கள்நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால், மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்ப‌டும். அதே போல், திருமாவளவனுக்கு கல்வி அமைச்சர் பதவி அளிக்கப்படும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு உள்ளாட்சித்துறை மற்றும் நிதித்துறையின் அமைச்சர் பதவி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
Image from Barakath Ali - journalist: *எலக்‌ஷன் என்சைக்ளோபீடியா!*  2026 சட்டமன்றத் தேர்தலுக்காக எடப்பாடி பழன...

Comments