
தமிழர் மருத்துவம்🍎
June 9, 2025 at 08:07 AM
உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள் -4
கப சுத்தி
மூலிகை கைகளில் பல இருந்தாலும் யோக நிலைக்கு உதவும் ஈர்ப்பு சக்தியுள்ள மூலிகைகள் இவ்வுலகில் உண்டு. இந்த விதமான மூலிகைகளில் தாதுக்களின் தன்மை அதிகமாக இருப்பதுடன் ஐம்பூத அணுவின் ஆற்றலும் அதிக அளவில் இருக்கும். அவ்வாறான மூலிகைகளையே காயகற்ப மூலிகைகள் என்று கூறுவர்.
இவ்வாறான காயகற்ப மூலிகைகளுள் முதன்மையான இடத்தைப் பெறுவது கரிசலாங்கண்ணி என்னும் தெய்வீக மூலிகையாகும். இந்த மூலிகையைப் பயன்படுத்தாத யோகிகளே இல்லை என்று கூறலாம்.
அவ்வளவு அரிய மூலிகையான கரிசலாங்கண்ணி மூலிகையே யோக அப்பியாசத்தின் போது தைல முறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கூறப்படும் கப சுத்தி முறைக்கும் இந்த மூலிகையே பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி மூலிகையை வேண்டிய அளவு பிடுங்கி வந்து நன்கு தண்ணீரில் கழுவி உரலில் போட்டு இடித்து சாறுபிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அந்தச் சாற்றின் அளவிற்கு சமஅளவு சுத்தமான பசு நெய்யினை எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு அடி கனத்த சட்டியில் ஊற்றி அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் பதமாகக் காய்ச்சவும்.
நன்கு காய்ந்து நெய் சிவந்து புகையும் நிலையில் படிகாரம் என்னும் சீனிக்காரத்தைப் பொடி செய்து சிறிதளவு அதில்போட்டு சற்றுநேரம் கொதிக்கவிட்டு பின்பு இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்தப் பாண்டத்தின் வாய்க்கு துணியால் வேடுகட்டி வைத்துக் கொள்ளவும். இது அமிர்தத்திற்கு ஒப்பானதாகும்.
தினமும் காலையில் தந்த சுத்தியை முடித்த பின்பு இந்த கரிசாலை நெய்யை வலதுகைப் பெருவிரலில் தொட்டு வாயினுள் உள்நாக்கின் பின்புறமுள்ள மேல்நோக்கி சுவாசமானது செல்லும் துவாரத்தின் வாயில் நன்கு தடவி விடவும்.
பின்பு யாரிடமும் பேசாமல் எதுவும் உண்ணாமல் (48 நிமிடங்கள்) இரண்டு நாழிகை நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து இருக்கவும்.
இவ்வாறு நெய்யினை மூன்று முறை நெய்யினைத் தடவிக் கொண்டு இரண்டு நாழிகை இருக்கும்போது மனிதனின் சுவாசத்தை தடை செய்து மரணத்தை ஏற்படுத்தும் கபம் என்னும் கோழை என்றும் கூறப்படும் ஊர்த்துவ நாடி எனும் மேல் முகமான மிக மெல்லிய, நுண்ணிய ஜீவனாகிய உயிர் எனும் ஜீவ அணுவின் சுழற்சிக்கு சுவாசமானது செல்லும் பாதையில் அடைத்துக் கொண்டிருக்கும் கோழையானது இந்த மூலிகை நெய்யின் ஆற்றலால் மிக மெதுவாகக் கரைந்து கரைந்து வாய்க்குள் வர ஆரம்பிக்கும். இதை வெளியில் துப்பிவிட வேண்டும். இந்தக் கோழையானது நச்சுத் தன்மை உடையது.
மனிதன் பிறக்கும்போது உருவான இந்தக் கபமானது இறக்கும் வரையில் தானாக வருவதில்லை அதனால் தான் நாசியின் மேல்புறம் வழியாக நெற்றியின் உட்புறத்தில் உள்ள சுவாச நரம்புகளின் வழியாக சுவாசமானது பிரிந்து ஜீவ அணுவிற்கு சுற்றிக் கொண்டு செல்கிறது.
இவ்வாறின்றி சுவாசமானது ஒரே நேர்க்கோட்டில் உடம்பின் மையப்பகுதியில் மேல்நோக்கி இயங்க வேண்டும். இதற்காக சுவாசத்தை இயற்கைக்கு மாறாக மேல்நோக்கி செலுத்தக் கூடாது. அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிய வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும்.
அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிக வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும். அவ்வாறு வருவதை சிலர் அமிர்தம் என்று கூறிக்கொண்டு உட்கொண்டு விடுவார்கள்.
மனித உடலின் கழிவாகிய கபம் என்னும் கோழையானது எங்காவது அமிர்தமாகுமோ? இவ்வாறு வாசியோகம்; என்னும் பயற்சியைச் செய்யும் சில யோகிகள் தெரியாமல் கோழையை உட்கொள்வதால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதுடன் வாய்நாற்றம், வயிற்றுவலி போன்ற நோய்களும் உண்டாகும்.
எனவே இந்த உண்மையான கபசுத்தி முறையினை முறையாக தவறின்றி தினமும் பயிற்சி காலத்தில் கடைப்பிடித்து வரும்போது ஊர்த்துவ நாடியானது சிறிது சிறிதாக அடைப்பு நீங்கி சுத்தமாகும்.
இவ்வாறு சுத்தமாவதால் சுவாசமானது தானாக மேல்நோக்கும். இதனால் ஜீவ அணுவின் சுழற்சி அதிகமாகி வான் அமிர்தம் எனும் அணுமின் காந்த ஜீவ சக்தியை அதிகமாக உள் ஈர்க்கும். இதுவே உண்மையான வாசியோகமாகும்.
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p
