TAMILMADAL OFFICIAL-8 மணி இலவச தேர்வு தொகுப்பு-TNPSC/TET/TNUSRB
                                
                            
                            
                    
                                
                                
                                June 9, 2025 at 02:06 PM
                               
                            
                        
                            🔹TET தேர்வர்கள் கவனத்திற்கு....🔹
2019இல் நடைபெற்ற TET PAPER-01 தேர்வில் 0.33% தேர்வர்களும் 2022 இல் நடைபெற்ற TET PAPER-01 தேர்வில் 14% தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்..
இதே போல் 2019இல் நடைபெற்ற TET PAPER-02 தேர்வில் 0.08% தேர்வர்களும் 2022 இல் நடைபெற்ற TET PAPER-02 தேர்வில் 6% தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.. 
(Ref: https://www.trb.tn.gov.in/tntet.php?language=LG-1&status=Active)
குறைந்த அளவிலான தேர்வர்கள் மட்டுமே TET தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.. இதற்கு முக்கிய காரணம் தேர்வு அறிவிப்பு வந்த பின்னரே தேர்வுக்கு தயாராகிறார்கள்.. அறிவிப்பு வந்த 70-90 நாட்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த நாட்களுக்குள் நிச்சயமாக பாடத்திட்டத்தை முடிக்க இயலாது... இந்த காரணத்தினால் தான் பலர் TET தேர்வுகளை வெற்றி பெறுவதில்லை...
🔹தேர்வில் வெற்றி பெற என்ன செய்யலாம்? 
▪️ தேர்வு எப்போது வரும் என்று எதிர்பார்க்காமல் தேர்வுக்கான தயாரிப்பினை தொடங்க வேண்டும். 
▪️ தேர்வு அறிவிப்பு வரும்பொழுது நீங்கள் பாடத்திட்டத்தினை 75% முடித்திருக்க வேண்டும்..
▪️TET தேர்வு பாடத்திட்டனை ஒத்த பிற தேர்வுகளை (TNPSC) நிச்சயம் எழுத வேண்டும்..  SGT தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் பலர் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரானவர்கள்.. ஆதலால் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடித்து அவர்களால் எளிதாக தேர்ச்சி அடைய முடிந்திருக்கும்..
🔹TET தேர்வு எப்போது இருக்கலாம்..?
▪️TRB வருடாந்திர அட்டவணையில் டெட் தேர்வு பற்றிய விபரங்கள் இல்லாத போதிலும், UGTRB தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. UGTRB  தேர்வு நடத்தப்படும் முன் நிச்சயமாக TET தகுதி தேர்வு நடத்தப்படும். அந்த வகையில் பார்க்கும் பொழுது அட்டவணையில் இல்லாத போதிலும் தேர்வு இருக்க வாய்ப்பு இருக்கிறது..
▪️ஒருவேளை இந்த ஆண்டு இல்லாத பட்சத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வாய்ப்பு இருக்கலாம்.. ஏனெனில் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு டெட் தேர்ச்சி அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்வு நடத்தி அடுத்த கல்வி ஆண்டுக்குள் ரிசல்ட் வெளியிடுவார்கள்.. ஆசிரியர்கள் பலரது சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகிறது. ஆதலால் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ தேர்வு வர வாய்ப்பு இருக்கிறது..  
▪️ ஆதலால் பாடத்திட்டத்தினை முழுமையாக முடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் இப்பொழுது இருந்து தொடங்கினால் சாத்தியமாகும்..
வாழ்த்துக்களுடன்...
உங்கள் *தமிழ் மடல்*...