
Dr.TK.Prabhu - TVK
June 4, 2025 at 04:56 AM
தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா முதற்கட்டமாக நடைபெற்றது.
இதில் சிவகங்கை கிழக்கு மாவட்டம் சார்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து செல்லும் சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த நிகழ்வு மாணவர்களின் உழைப்பையும், கல்விக்கான உறுதிப்பாட்டையும் பாராட்டும் விதமாக அமைந்தது. தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்கள் மேடையில் அழைத்து வாழ்த்தியது இதுபோன்று பல மக்கள் பணிகளில் ஈடுபட உற்சாகத்தையும், உறுதிபாட்டையும் அளித்தது.
மேலும் நிகழ்விற்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உடல் நலனை பேணிக்காக மருத்துவ அணிக்கு தலைமை தாங்கினேன். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அவர்களின் எதிர்காலம் மேலும் வளர வாழ்த்துகிறேன்!
❤️
👍
💐
❤
9