
Aanthai Reporter News Channel
June 13, 2025 at 03:59 AM
🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥
இசை இளவரசன் ஜிவி பிரகாஷூக்கு பர்த் டே டுடே!💐
தம்பீ.. உங்கள் பிறந்தநாளில், உங்கள் இசை மற்றும் நடிப்புத் திறமைகளால் தமிழ் சினிமாவை மிளிரச் செய்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! உங்கள் இசையால் மனங்களைக் கவர்ந்து, நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த உங்களின் பயணம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.
உங்கள் இசையின் மந்திரம்
உங்கள் இசையில் பல ஹிட் பாடல்கள் நம் இதயங்களைத் தொட்டவை. கொஞ்சம் யோசிச்சிப் பார்த்த ஒரு சில இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே பிரமாதமான ஓப்பனிங் கிடைச்சுது. அப்படியான ஓப்பனிங்கிற்கு சொந்தக்காரர் நீங்க்.. 90’ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தை விளக்கும் விதமாக ஒருபாடலை சொல்லேன் என்று மைக்கை நீட்டினா பெரும்பாலான 90’ஸ் கிட்ஸ்களின் முதல் தேர்வு வெயில் படத்தில் இடம்பெற்ற, “வெயிலோடு விளையாடி” பாடலாகத்தான் இருக்கும். டைரக்டர் வசந்த பாலனின் வெயில் படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானதா சொல்வாய்ங்க. ஆனால் இதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் பாடல் பாடி, பாடகராக அறிமுகமாகிப்புட்டீங்க . ஜெண்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் வரும் குழந்தையின் குரல் உங்களோடதுன்னு பலருக்கும் இன்னமும் தெரியாது.
உங்க வெயில் படத்தில் வெயிலோடு விளையாடி பாடல் மட்டும் இல்லாமல் உருகுதே உருகுதே பாடலும் எவர் கிரீன் ஹிட்.
அந்த வெயில் படத்துக்குப் பின்னர் உங்க மியூசிக்கில் வெளியான கிரீடம், பொல்லாதவன் படங்கள் அன்றைய வானொலிகளை ஆக்கிரமிசுப்புடுச்சுன்னுதான் சொல்லோணும்.
இசையமைப்பாளராக, பாடகராக இசைப் பிரியர்களுக்கு இன்றைக்கும் விருந்து வைச்சிகிட்டே இருக்கீங்க.
காதலை தனது இசையின் மூலம் கடத்தும் வல்லமை கொண்ட நீங்க. மனுசனோட மற்ற உணர்வுகளையும் தனது இசையால் கடத்தி ரசிகர்கள் மனதில் காலத்தால் அழிக்கமுடியாத சிம்மாசனத்தை எழுப்பிபுட்டீங்க. அந்த வரிசையில், தெய்வத்திருமகன் படத்தில் வரும் ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு, மதராசப்பட்டினத்தில் இடம் பெற்றுள்ள, பூக்கள் பூக்கும் தருணம் பாடல், டார்லிங் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல், ஆடுகளம் படத்தில் இடம் பெற்றுள்ள யாத்தே யாத்தேவும், ஐய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாடலும், மயக்கம் என்ன படத்தில் வரும் பிறை தேடும் இரவிலே உயிரே, அங்காடித்தெருவில் இடம்பெற்றுள்ள உன்பேரைச் சொல்லும்போதே, தாண்டவம் படத்தின் ஒருபாதி கதவு பாடல், அசுரன் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் இன்னிக்கும் எம் போன்றோரை கிறங்க வைக்குது
தம்பி சூர்யாவின் சூரறைப்போற்று படத்தின் பின்னணி இசை மட்டும் கேட்டால் நம்மை உணர்ச்சிவசப்படுத்தும் அளவிற்கு தனது இசையைக் கொடுத்தீங்க அந்தப் படத்தின் பின்னணி இசைக்காக நேஷனல் அவார்ட் வாங்கினீங்க. அதேபோல் ஆயிரத்தில் ஒருவன், அசுரன், ஆடுகளம் போன்ற படங்களின் திரைக்கதைக்கு முதுகெழும்பாக அமைஞச்து உங்க பின்னணி இசைதா.
இப்படி பின்னணி இசையின் அசுரனாகவே வலம் வருகின்றார். பெரிய ஹீரோக்கள் என்றாலும் சரி வளர்ந்து வரும் நடிகர்கள் என்றாலும் சரி படத்திற்கு என்ன தேவையே அதனைச் சரியாக கொடுத்து படத்திற்கு பலமாகவே இருந்து வாரீங்க
இப்ப சிங்கர், மியூசிக் டைரக்டர், ஆக்டர், புரொடியூஸர்-னு பல முகம் கொண்ட உங்க 38-வது பிறந்தநாளில், மேலும் பல வெற்றிகளையும், இசை மற்றும் நடிப்பில் புதிய உச்சங்களையும் அடையவும் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் வாழ்த்துகிறோம்!
உங்கள் இசை எப்போதும் எங்கள் இதயங்களில் ஒலிக்கட்டும், உங்கள் நடிப்பு எங்கள் கண்களை மகிழ்விக்கட்டும்!🤝🌹🫶
,